News March 29, 2025
குஜராத் அணி முதலில் பேட்டிங்…!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI அணியும், கில் தலைமையிலான GT அணியும் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, GT 3 முறையும் MI 2 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Similar News
News July 9, 2025
புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நேரு. அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் வழங்கியுள்ளார்.
News July 9, 2025
எமோஜி அனுப்பினால் உறவுகள் மேம்படுகிறதா?

நவீன யுகத்தில் நேரடி உரையாடலை விட சமூக வலைதள சாட்டிங்தான் அதிகம். அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும், நெருக்கம் வலுப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக எமோஜி உள்ளதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கண்டறிந்துள்ளார். உங்களுக்கு எமோஜி பிடிக்குமா? ?
News July 9, 2025
மாடுகளுடன் மாநாடு! பணிகளை ஆய்வு செய்த சீமான்

ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் சொல்லப்படும் என்பது போல் <<16951728>>ஒரு மாநாட்டை<<>> சீமான் நடத்த உள்ளார். மதுரை விராதனூர் பகுதியில் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை போடப்பட்டு அதில் சீமான் பேச உள்ளார். இந்நிலையில் மைக்கில் பேசி மாடுகள் மிரளுகின்றதா என சீமான் நேரில் ஆய்வு செய்தார்.