India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டுமென சவுதி வலியுறுத்தியுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஆசியப் பகுதியில் அமைதி & ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா முழுவதும் மராட்டியர்களின் புத்தாண்டு தினமான ‘குடி பத்வா’ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த கால கொண்டாட்டமாகவும், இந்துக்களின் புத்தாண்டாகவும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாக்பூரில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து ஸ்கூட்டர் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், மாநிலம் முழுவதும் ஆட்டம், பாட்டம் என திருவிழா களைகட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில் இன்று ₹80 உயர்ந்து ₹53,360க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,670க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ₹88க்கும், கிலோ வெள்ளி ₹88,000க்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

400 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற பாஜகவின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இலக்குகளை பாஜக எட்டியதில்லை என்பதே வரலாறு என்றார். 2017 குஜராத் தேர்தலில் இலக்கு 150 சீட், வென்றது 99 சீட். 2018 சத்தீஸ்கர் தேர்தலில் இலக்கு 50 சீட், வென்றது 15 சீட். 2019 ஜார்கண்ட் தேர்தலில் இலக்கு 65 சீட், வென்றது 25 சீட். 2021 தமிழ்நாடு தேர்தலில் இலக்கு 118 சீட், வென்றது வெறும் 4 சீட் மட்டுமே என்றார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET) தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மாா்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில், 2 நாள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் ‘G.O.A.T.’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த நடிகர் விஜய்யும், படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகவதி, திருப்பாச்சி, யூத், மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த யுகேந்திரன், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யின் இந்தப் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் சூளுரைத்தார்.

ரவீந்திர ஜடேஜாவை, CSK அணியின் தளபதி என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். நேற்றைய போட்டியில், சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் 3 கேட்சுகளை பிடித்த அவர், ஐபிஎல்லில் 100 கேட்சுகளை பிடித்த 2ஆவது CSK வீரர் என்ற பெருமையையும் பெற்றார். தோனியை ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் அழைத்து வந்த ரசிகர்கள், தற்போது ஜடேஜாவை ‘தளபதி’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

பொய்யான விளம்பரம் மூலம் ஈட்டிய ₹12 கோடியை திருப்பி செலுத்த வேண்டுமென பிரபல நிதி ஆலோசகர் ரவீந்திர பாலுபார்திக்கு செபி உத்தரவிட்டுள்ளது. பங்குச் சந்தையில் 1000% லாபம் ஈட்ட வழிகாட்டுவதாக பார்தி விளம்பரம் செய்துள்ளார். இதன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை அவர் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, புகாரை ஆராய்ந்த செபி பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடவும் அவருக்கு தடை விதித்துள்ளது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வடக்கு, மேற்கு இந்தியாவில் அக்கட்சியை I.N.D.I.A கூட்டணி கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம் பாஜகவை வீழ்த்த போதிய திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.