India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்ததே காரணமென ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளெசிஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்கு பின்னர் பேசிய அவர், நாங்கள் பேட்டிங் செய்த போது, சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர். சேஸிங்கில் சிஎஸ்கே எப்போதும் முன்னிலையில் இருக்கும். நாங்கள் நெருக்கடி தர முயற்சித்தோம். ஆனால் அது பலிக்கவில்லை’ என்றார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைது குறித்து பேசிய அவர், ‘ஹேமந்த் சோரன், கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. இதற்காக வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது’ என்றார்.

◾பால்: பொருட்பால்
◾இயல் : அரசியல்
◾அதிகாரம்: ஆள்வினையுடைமை
◾குறள்: 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
◾விளக்கம்: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

ரஷ்யாவில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகுந்த 5 நபர்கள், கூட்டத்தினரை நோக்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும்.

விக்கெட் கீப்பராக இருந்த தோனியை, இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க தான் பரிந்துரைத்த நினைவுகளை சச்சின் பகிர்ந்துள்ளார். ஐ.பி.எல் சீசன் 17 தொடர்பான டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘2007ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவார், என்னை இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார். அப்போது என் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், தோனியின் பெயரை பரிந்துரை செய்தேன்’ என்றார்.

இன்று (மார்ச் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

காஸாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்களும், எதிராக ரஷ்யா, சீனா மற்றும் அல்ஜீரியா வாக்களித்தன. இதில் கயானா பங்கேற்கவில்லை. மேலும், ஹமாஸ் அமைப்பினர், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

EDயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அந்தப் பதவியில் நீடித்தால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். முறைகேடு புகாரில் கைதானதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டவிதிகள் இல்லை என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அது வழிவகுக்கும் எனக் கூறிய நிபுணர்கள், மத்திய அரசும் அதனை துரிதப்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

➤ தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். ➤ மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் ➤ தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் ➤ தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க உள்ளது – அண்ணாமலை ➤ ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி.

இன்று (மார்ச் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.