News March 23, 2024
ரஷ்யாவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி

ரஷ்யாவில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகுந்த 5 நபர்கள், கூட்டத்தினரை நோக்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும்.
Similar News
News November 11, 2025
நடிகர் அஜித் வீட்டில் குவிந்த போலீஸ்.. பதற்றம் உருவானது

சென்னை ECR-ல் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், நடிகர் SV சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
News November 11, 2025
டெல்லி ஆபத்தை முன்பே கணித்த பள்ளி மாணவன்

பள்ளியை முடித்துவிட்டு செங்கோட்டை மெட்ரோ வழியாக வந்த 12-ம் வகுப்பு மாணவன், அப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதை கண்டதாக கூறியிருக்கிறார். Reddit தளத்தில் இவர் இதைபற்றி பதிவிட்ட 3 மணி நேரத்தில் அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சிறுவனின் Reddit பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது
News November 11, 2025
பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன் கிடைக்கும்

எந்த பிணையமும் இல்லாமல் பெண்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்யவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. உங்களது வங்கியின் இணையதளத்தின் வாயிலாக இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். புதிய தொழில் தொடங்கும் ஐடியாவில் இருக்கும் பெண்களுக்கு SHARE THIS.


