India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி தொகுதியில் பாஜக சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழகம் வரும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இன்றிரவு திருச்சியில் வாகன பேரணி செல்ல இருந்தார். இந்நிலையில், நட்டா பங்கேற்கும் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலை காரணம் காட்டி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆகஸ்ட் மாதம் ரோபோட் டாக்சியை களமிறக்க போவதாக அறிவித்துள்ளது. உலகில் தற்போது ஓடும் வாகனங்கள் டிரைவர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ரோபாட் மூலம் இயக்கப்படும் டாக்சியை அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறி வந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் பக்க பதிவில், ஆகஸ்ட் 8இல் ரோபோட் டாக்சியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைதுசெய்தது அனைவரும் அறிந்ததே. விவசாயிகள் & கூலித் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக கொண்ட ஆரணி தொகுதியில் இது திமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதனால், அங்கு வாக்கு கேட்க செல்லும் திமுகவினருக்கு வரவேற்பு இல்லையாம். இதை மையப்படுத்தி இப்போது அதிமுக தீவிர பிரசாரம் மேற்கொள்வதாக தகவல்.

மஜ்லீஸ் இ கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, தனக்கு கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு சமூகவலைதளங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி, நேற்று தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்தார். முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரத்தவாந்தி எடுத்ததால், இரவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. திடீரென்று உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவர் காலமானார்.

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கானல் நீர் போன்றது; அதை பயன்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்த காங்., கட்சி, தற்போது மாநில அடிப்படையில் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதி அளித்திருப்பது நகைப்புக்குரியது என்றார்.

ஐபிஎல் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா & வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரைக் கருத்தில் கொண்டு அவரை தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழல் எழுந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, டீசர் அல்லது டிரெய்லர் தொடர்பான அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்கள் போராடிய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், போராடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவில்லை. 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கும் 8 தொகுதிகளை ரகசிய சர்வேயில் இபிஎஸ் அடையாளம் கண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொங்கு பகுதியில் கோவை உள்ளிட்ட 4 தொகுதிகள், தென் மண்டலத்தில் நெல்லை, வடதமிழகத்தில் ஆரணி உள்ளிட்ட 3 தொகுதிகளை டார்கெட் செய்திருக்கும் அதிமுக மேலிடம், கே.பி.முனுசாமி, வேலுமணி, இசக்கி சுப்பையா ஆகியோரை நேரடியாகக் களத்தில் இறக்கி வேலை பார்த்து வருகிறதாம்.
Sorry, no posts matched your criteria.