India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடைக்காலம் தொடங்கியதால் நாட்டின் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பிப்ரவரியில் 13% அதிகரித்து 21.64 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் 19.15 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் – பிப்ரவரி காலக்கட்டத்தில் மொத்தமாக 880.72 மில்லியன் டன் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம், கல்வி நிலையங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் செயல்படாது.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வளர்ந்த பாரதம் என்ற கனவிற்காக செலவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், 2047 என்ற இலக்கிற்காக 24/7 உழைத்து வருவதாக கூறினார். மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் உலக நாடுகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் மகளிருக்கு நிகழும் அநீதிகளை நாடு பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சில உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், உடல்நிலை பாதிக்கும். அது எந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம். 1) கோழி இறைச்சி 2) கீரை 3) முட்டை 4) காளான் 5) சாதம் ஆகியவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அதில் ஏற்படும் மாற்றங்கள் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறு போன்ற உடல்நிலை பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கீரை மற்றும் எண்ணெய்களை மீண்டும் சூடாக்கினால் புற்றுநோய் ஆபத்து உள்ளது.

டாப் 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் கடந்த வார சந்தை மூலதன மதிப்பு ரூ.1.71 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் உள்பட மற்ற 6 நிறுவனங்கள் ரூ.78,127 கோடி சரிவை சந்தித்துள்ளன. டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டின. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன.

பிரதமர் மோடிக்கு தென்னிந்தியாவின் மதிப்பு தெரியவில்லை என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்ததாக தெரிவித்த அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற சிந்தாந்த அறிக்கை என புகழாரம் சூட்டினார். தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் பாஜகவினர் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க நினைப்பதாக தெரிவித்தார்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 235 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது மும்பை அணி. டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை வீரர்கள், எதிரணியின் பந்துகளை பதம் பார்த்தனர். இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 49, டிம் டேவிட் 45 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,558.3 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மார்ச் 29ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு 295.1 கோடி டாலர் உயர்ந்து 64,558.3 கோடி டாலராக உள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச கையிருப்பு இதுவாகும். மதிப்பீட்டு வாரத்தில் தங்கம் கையிருப்பு 67.3 கோடி டாலர் அதிகரித்து 5,216 கோடி டாலராக உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பி.டி.பி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக்கட்சி, தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் வஹீத் பர்ரா, பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி மிர் ஃபயாஸ் ஆகியோர் பி.டி.பி கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கிய டாக்ஸி டிரைவர் ஒருவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்திருக்கிறது. டிப்ஸாக கிடைத்த 5 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 400) அவர் அந்த சீட்டினை வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு 1,50,000 டாலர்கள் பரிசு கிடைத்திருக்கிறது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ஒரு கோடியே 24 லட்சம் ஆகும்.
Sorry, no posts matched your criteria.