News April 7, 2024
24 மணிநேரமும் இதற்காக உழைத்து வருகிறேன்

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வளர்ந்த பாரதம் என்ற கனவிற்காக செலவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், 2047 என்ற இலக்கிற்காக 24/7 உழைத்து வருவதாக கூறினார். மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் உலக நாடுகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் மகளிருக்கு நிகழும் அநீதிகளை நாடு பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News December 12, 2025
தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
News December 12, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.
News December 12, 2025
காதல் திருமண மோதல் வழக்கில் அதிரடி கைது!

மதம் மாறி திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினர் 4 பேரை சரமாரியாக வெட்டிய பெங்களூரு கும்பலில் 9 பேரை TN போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நாகவராவை சேர்ந்த ராகுல் டேனியல், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனாவை காதலித்து வந்தார். வேளாங்கண்ணியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் உறவினர்கள், டேனியல், அவரது அம்மா உள்ளிட்ட 4 பேரை வெட்டிவிட்டு கீர்த்தனாவை பெங்களூருவுக்கு கடத்தி சென்றனர்.


