India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்கும் சின்னத்தை ஒதுக்காத தேர்தல் ஆணையம், அமமுக, தமாகாவுக்கு மட்டும் குக்கர், சைக்கிள் சின்னங்களை ஒதுக்கியது எப்படி என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியை பாமக இன்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் “திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்” என்ற அம்சம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 21 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலும் கட்டாயமாக்க வழி செய்வோம் என்று பாமக வாக்குறுதி அளித்திருக்கிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும், அவை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் வாதிட அனுமதிக்க கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988இல் வெளியான ‘சத்யா’ திரைப்படம், ரீ-மேக் செய்யப்பட உள்ளது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கெனவே, ஹிந்தியில் இருந்து ரீ-மேக் செய்யப்பட்டது தான் சத்யா. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான இது, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிட 1400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 67 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியிருக்கின்றன. நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் பெறப்பட்டுள்ள வேட்புமனுக்களில் சுமார் 150 பெண்களும் உள்ளனர்.

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் AAP கட்சியில் இருந்த ஒரே ஒரு MP சுஷில் குமார் ரிங்கு இன்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், “எனது கட்சி எனக்கு சரியாக ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைத்துள்ளேன்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நடவடிக்கை விவரங்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஏப்.25க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனது கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்குமாறு விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னங்கள் ஒதுக்கப்படும். மற்ற கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சின்னத்தை கேட்டுப் பெற கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் பானை சின்னத்தை கேட்டிருக்கிறது விசிக.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என அமலாக்கத்துறை தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இவர்களைத் தொடர்ந்து, தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது. கொச்சி மினரல்ஸ் & ரூட்டெய்ல் நிறுவனம் வீணாவின் நிறுவனத்திற்கு முறைகேடாக பணம் வழங்கியதாக வந்த புகாரில் ED வழக்கு பதிவு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.