India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயிலில் உடனடி டிக்கெட், முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் என பல டிக்கெட்டுகள் உள்ளன. இதில் பயணத் தேதியை திட்டமிட்டு முன்கூட்டி டிக்கெட்டை முன்பதிவு செய்ய ரயில்வே வசதி அமலில் உள்ளது. இந்த டிக்கெட்டை இந்தியர்கள் எனில் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு இணையதளத்திலோ, டிக்கெட் கவுண்டர் மூலமோ முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டினர் எனில் 365 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம்.
அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷர்மிளா தாபா. நேபாளியான அவர், தமிழகத்தை சேர்ந்த நடன உதவி இயக்குனர் ரகுவை திருமணம் செய்து சென்னையில் வசிக்கிறார். பாஸ்போர்ட் நீட்டிப்புக்காக விண்ணப்பித்தபோது, புதிய முகவரியை கொடுத்துள்ளார். இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் புகார் அளிக்கவே, பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தவெகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யுடன் இருப்பவர்கள் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதாகவும், விஜய்யை நெருங்க கூட விடுவதில்லை என்றும் அவர் காட்டமாக பேசியுள்ளார். முன்னதாக, விஜய்யின் படத்தை அவர் நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்திற்கான GST வசூல் ₹1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலை விட 9.9% அதிகமாகும். கடந்த நிதியாண்டுக்கான மொத்த GST வசூல் ₹22.08ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் தொகை அதிகரித்து வருவது மக்கள் மீது சுமையாக வந்து இறங்குகிறது. அதேநேரம், அதிக வரி வசூல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆக, GST வரி சுகமா? சுமையா?
ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிஸால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், 70% தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதே இதற்கு தீர்வாக இருக்கும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் காம வலை வீசி பணம் பறித்த டீச்சர் கைதாகியுள்ளார். மகனின் பள்ளி சேர்க்கைக்காக சென்றவருடன், டீச்சர் ஸ்ரீதேவி ருடகி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் தகாத உறவில் இருந்த நிலையில், ஸ்ரீதேவி அதனை வீடியோ எடுத்து பணம் பறித்துள்ளார். ரூ.4 லட்சத்தை மிரட்டி பறித்த நிலையில், மேலும் ரூ.20 லட்சம் கேட்டதால் அவர் போலீசை நாடினார். இதன்பின், டீச்சர், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைதாகியுள்ளனர்.
மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இபிஎஸ் ஆஜராக கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் பேட்டியளித்தபோது, தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி. பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் என இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவது நுகர்வோரின் பாக்கெட்டுகளில் பொத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்றும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரலாற்று உச்சமாக, இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் $3,147 டாலர்களை தொட்டது. ஆகையால், நாளை காலை சென்னையிலும் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.