News April 1, 2025

PF ஆட்டோ செட்டில்மென்ட் ரூ.5 லட்சமாக உயருகிறது

image

மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News April 10, 2026

செங்கை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

₹1000-க்கு மேல் பெட்ரோல் போட முடியாதா?

image

ரிலையன்ஸின் Jio-BP பெட்ரோல் பங்குகளில் ₹1000-க்கு மேலான தொகைக்கு பெட்ரோல் போட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், சில ஊர்களில் தற்காலிக சப்ளை பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஸ்டாக் குறைந்ததால் அந்த இடங்களில் பங்க்குகள் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், எந்த லிமிட்டும் இல்லை, சப்ளை தட்டுப்பாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

image

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!