India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SBI வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையில் நேற்று திடீர் தடங்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பை சந்தித்தனர். இதனிடையே வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். பணம் இன்னும் வரவு வைக்கப்படாததால் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என பலர் முறையிட்டுள்ளனர். இதற்கு எஸ்பிஐ இன்னும் பதிலளிக்கவில்லை. நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்திருக்கிறீர்களா?
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மியான்மர், தாய்லாந்து போல் பாகிஸ்தானில் பெரும் சேதம் இல்லை. உயிரிழப்புகள் பற்றி இதுவரை அரசு சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஈரானை மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதாகவும் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
வாட்ஸ் அப்பின் விதிகளை மீறியதாகக் கூறி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் தவறான கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரும் அவரை, பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுடன் சந்தித்து தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனு அளிக்கவும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபல இந்தோனேசிய நடிகர் Ray Sahetapy(68) இன்று காலமானார். இந்த தகவலை அவரது மகன் சூர்யா Sahetapy உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 40 வருடங்களாக இந்தோனேசிய திரைப்படங்களில் முன்னணி நடிகராக வளம் வந்த அவரின், மறைவை அடுத்து ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர், ஆக்சன் பட ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான ‘ The raid : redemption’ படத்திலும் நடித்துள்ளார். RIP Ray Sahetapy.
Points tableல் முதல் இடத்தில் இருக்கும் RCB அணி, 4வது இடத்தில் இருக்கும் GTயை எதிர்கொள்கிறது. பெங்களூரு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், ரன்மழை பொழியும் என நம்பலாம். கடந்த சீசனில் RCBக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் GT தோல்வியடைந்த நிலையில், அதற்கு பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும். யார் வெற்றி பெறுவாங்க என நினைக்கிறீங்க?
மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வரவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால், EB BILL அதிகமாக கட்டவேண்டிய சூழல் எழுகிறது. இந்நிலையில், 2021 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் மின் நுகர்வை கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.