News April 2, 2025

மியான்மரை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

image

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மியான்மர், தாய்லாந்து போல் பாகிஸ்தானில் பெரும் சேதம் இல்லை. உயிரிழப்புகள் பற்றி இதுவரை அரசு சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Similar News

News January 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 20, 2026

ஆப்கான் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வணிக பகுதியில் உள்ள ஹோட்டலை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.

News January 20, 2026

ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

image

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!