news

News May 3, 2024

9 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை

image

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

News May 3, 2024

IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

image

கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, KKR அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், MI 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால், MI வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 3, 2024

ரேவண்ணா ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை

image

பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு எம்பி ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். மைசூர் கே.ஆர்.காவல் நிலையத்தில் ஒரு நபர், ரேவண்ணா அழைத்ததாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தன் தாயைக் காணவில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இன்று புதிதாக மேலும் ஒரு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

News May 3, 2024

1000 தியேட்டரில் வெளியான ‘நடிகர்’ திரைப்படம்

image

பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர்’ திரைப்படம் 1000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. ஜீன் லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், கவனம் ஈர்த்தது. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து சூப்பர் ஸ்டாராகும் நடிகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. டோவினோ தாமஸ் மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

News May 3, 2024

வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அமிதாப்

image

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அங்கு, அமிதாப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி & அமிதாப் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News May 3, 2024

நிலவை அடைவதற்கான பாகிஸ்தானின் முதல் வெற்றி

image

நிலவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதல் பயணத்தை பாகிஸ்தான் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஒத்துழைப்புடன் ICUBE-Q என்ற செயற்கைக்கோளை சீனாவின் ஹைனானில் உள்ள ஏவுதளம் மூலம் நிலவிற்கு பாகிஸ்தான் செலுத்தியுள்ளது. இது நிலவில் தரையிறங்காமல், 3-6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய உள்ளது. இன்னும் 5 நாள்களில், இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடையும்.

News May 3, 2024

மருத்துவமனையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி

image

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான அங்கிதா லோகண்டே கையில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது காதல் கணவர் விக்கி ஜெயினும் உடன் இருக்கிறார். இதைப் பார்த்து கொந்தளித்துப் போன நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும்போது கூட காதலனுடன் ரொமான்ஸ் தேவையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News May 3, 2024

IND-PAK டி20 போட்டி: ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்வு

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண ரசிகர்கள் போட்டி போடுவதால், ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், மே மாதம் 9ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, ஹோட்டல் அறைகளின் வாடகை 600% சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை காண வந்த ரசிகர்கள், ஹேட்டலில் இடம் இல்லாததால் மருத்துவமனைகளை புக் செய்தனர்.

News May 3, 2024

பள்ளிகளில் சினிமா திரையிட பரிசீலிக்க உத்தரவு

image

பள்ளிகளில் கல்வி குறித்த சினிமாவை திரையிட வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி, கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கல்வி குறித்த சினிமாவை திரையிட உத்தரவிட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சினிமாவை திரையிடுவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.

News May 3, 2024

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்துக்குள் முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம், அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய ரூ.25 வசூலிக்கப்படும், ஆஃப் லைனில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுமென்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!