News May 3, 2024
மருத்துவமனையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான அங்கிதா லோகண்டே கையில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது காதல் கணவர் விக்கி ஜெயினும் உடன் இருக்கிறார். இதைப் பார்த்து கொந்தளித்துப் போன நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும்போது கூட காதலனுடன் ரொமான்ஸ் தேவையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
தங்க நகை கடன்… மக்களுக்கு அதிர்ச்சி

தங்க நகை கடன் வழங்குவதில் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன் பெறுபவர்கள் அந்த நகை தனக்கு சொந்தமானது என நிரூபிக்க ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த அறிவிப்பை RBI வெளியிட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், அது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
இடிக்கப்படும் நேரு ஸ்டேடியம்!

டெல்லியின் அடையாளமாக திகழும் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. 1982-ல் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இங்கு 102 ஏக்கர் பரப்பளவில் நவீன ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளே ஸ்போர்ட்ஸ் சிட்டியின் முக்கிய இலக்காகும்.
News November 10, 2025
நீக்கப்பட்டவர்கள் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பே இல்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு வந்தால், அவர்களுக்காக தலைமையிடம் பேச தயார் என Ex அமைச்சர் OS மணியன் கூறியுள்ளார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் உள்ளதை அவரது பேச்சு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


