India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் நேற்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா & கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பாஜக வேட்பாளர் வினோஜ் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து & ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்த பின் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்படுகிறது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மலர் குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. ரோஜா இதழ்கள், மகிழம் பூ, ஆவாரம் பூ, பன்னீர் பூ, மல்லிகைப்பூ, சாமந்தி பூ, ரோஸ்மேரி பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் & துர்நாற்றம் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1,126 திரையரங்குகளில் நாளை (ஏப்ரல் 19) சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்காக தனியார் நிறுவனங்களுக்கும் முழுநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை நாசிலை (Nozzle) மிகவும் இலகுவான எடையில் இஸ்ரோ உருவாக்கியுள்ளது. கொலம்பியம் அலாய் மூலக்கூறால் ஆன நாசில்களுக்கு மாற்றாக சி-சி மூலக்கூறு நுட்பத்தில் இயங்கும் எஞ்சின் மூலம் பிஎஸ் 4 நிலையில் எரிசக்தி ஆற்றல் திறன் மேம்படுவதுடன் எடையும் 67% குறையும். கூடுதலாக 15 கிலோ கொண்ட ஆய்வுக் கருவிகளை PS-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.

நடிகர் தனுஷ் – இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகிவரும் ‘குபேரா’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா இதே தலைப்பை தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக வர்த்தக சபையில் முறையிட்டும், அவருக்குச் சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவர் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறப்படுகிறது.

➤உலக மரபுரிமை நாள் ➤1506 – வாடிகன் புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ➤1883 – திரைப்பட முன்னோடி சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த நாள். ➤1946 – அனைத்துலக நீதிமன்றம் முதல்முறை டென் ஹாக் நகரில் கூடியது. ➤1955 – இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த நாள். ➤1958 – பண்டா-செல்வா ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒருதலைப்பட்சமாக மீறியது. ➤1980 – இங்கிலாந்திடமிருந்து சிம்பாப்வே விடுதலை அடைந்தது.

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோமென பாஜக அதிக மதிப்பீடு செய்வதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். மும்பையில் பேசிய அவர், கள நிலவரமும் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் தேர்தலை சுமூகமாக நடத்தினால், பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்காது எனக் கூறினார்.

GT அணிக்கு எதிரான போட்டியில் 8.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் DC அணி வென்றது. இதன் மூலம் 67 பந்துகள் மீதமிருந்த நிலையில் 92 ரன்கள் எடுத்து இந்த சீசனில் பந்துகள் அடிப்படையில், DC அணி வெற்றியைப் பதிவு செய்தது. 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் DC பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 2022இல் PBKSக்கு எதிராக 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் DC அணி வெற்றி பெற்றது.

‘தரமணி’ படத்தில் நடிக்க முடிவு செய்தபோது, ரஜினி சாரிடம் அட்வைஸ் கேட்டேன் என்று நடிகர் வசந்த் ரவி
கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ஜெயிலர் படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அடுத்து வெப்பன், இந்திரா ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் கதை என்ன? எப்படி இருக்கும்? என்பது எனக்கும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.