News April 18, 2024
‘குபேரா’ பட தலைப்புக்கு சிக்கல்

நடிகர் தனுஷ் – இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகிவரும் ‘குபேரா’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா இதே தலைப்பை தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக வர்த்தக சபையில் முறையிட்டும், அவருக்குச் சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவர் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 17, 2025
பெரம்பலூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 குறைந்தது

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹173-க்கும், கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹10,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 17, 2025
தருமபுரி: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

ஈசல்பட்டியை சேர்ந்த சசிகுமார் இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.முத்துலட்சுமியிடம் பணம் நகை வாங்க கணவரது விட்டார் கூறிய நிலையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் சசிகுமார் குடிப்பதும் அடிப்பதுமாக இருந்துள்ளார், இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


