news

News April 4, 2024

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்

image

ஆன்மாவின் கிரகமாக கருதப்படும் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு புதன், ராகு உள்ளதால் சூரியனின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் கடகம், துலாம், தனுசு, மகர ராசியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க உள்ளனர். கொடுக்கல் வாங்கலில் தகராறு, பண முடக்கம், தொழிலில் சுணக்கம், பண வரவு இல்லாதது என பல்வேறு சிக்கல்களை இந்த ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News April 4, 2024

ஆடுகளை தத்தெடுக்க அழைக்கும் நகரம்

image

காட்டு ஆடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவற்றை தத்தெடுக்க வருமாறு இத்தாலிய தீவு நகரமான அலிகுடி (Alicudi) மேயர் ரிக்கார்டோ குல்லோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 5 சதுர கி.மீ தொலைவு கொண்ட தீவில், 100 மக்களுக்கு, 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்தாலும், தாவரங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு ஆடுகள் அதிக சேதங்களை விளைவிக்கின்றதாம்.

News April 4, 2024

டைட்டானிக் கப்பலை சுக்குதூறாக உடைத்த இபிஎஸ்!

image

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்னும் டைட்டானிக் கப்பலை, இபிஎஸ் ஓட்டத் தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்குநூறாக ஆக்கிவிட்டாரென பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ‘இந்தியா நல்லா இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் ’ என்றார்.

News April 4, 2024

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

image

உடலில் வரக்கூடிய மிக இயல்பான பிரச்னைகளுள் ஒன்று மலச் சிக்கல். ஆனால், இது நாளடைவில் உடலில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மலச்சிக்கல் காரணமாக மூல நோய், குத பிளவுகள், குத புற்றுநோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, மலச்சிக்கலை தடுக்கும் வகையில் அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News April 4, 2024

வட்டியை குறைக்குமா ரிசர்வ் வங்கி?

image

மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஆண்டுக்கான கொள்கை முடிவுகளை ஆளுநர் சக்தி காந்த தாஸ் நாளை (05.04.2024) வெளியிடவிருக்கிறார். கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தன. தற்போது பணவீக்கம் சற்று குறைந்திருப்பதால் நாளை ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 4, 2024

நாளை போட்டி.. இன்று மின்சாரம் துண்டிப்பு

image

CSK-SRH அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் ₹1.63 கோடியை செலுத்தவில்லை எனக் கூறி அந்த மைதானத்திற்கான மின்சார இணைப்பை தெலங்கானா மின்சார வாரியம் துண்டித்துள்ளது. ஆனால், ஐபிஎல் போட்டிக்கான இலவச டிக்கெட் கொடுக்காததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளதாக HCA பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

News April 4, 2024

திமுகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கிறது

image

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மோடியின் வருகையால் திமுகவுக்கு தான் முன்னேற்றம் என்றார். மேலும், வருடம் முழுவதும் பிரதமர் மோடி அமர்ந்திருந்தாலும் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது என விமர்சனம் செய்தார்.

News April 4, 2024

IPL: புதிய சாதனை படைத்தார் கில்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (ஒரு போட்டியில்) குவித்த வீரர் என்ற பெருமையை குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் பெற்றிருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நேற்று 85 ரன்கள் குவித்த சுனில் நரைனின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்திருந்தார். கில்லின் இந்த சாதனையை யார் முறியடிப்பார் என்று நினைக்கிறீர்கள்?

News April 4, 2024

கச்சத்தீவை திரும்பத் தர மாட்டோம்

image

இந்தியாவிடம் மீண்டும் கச்சத்தீவை வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. இந்த நிலையில், கச்சத்தீவை திரும்பத் தர முடியாது எனக் கூறியுள்ள டக்ளஸ் தேவானந்தா, அப்படி செய்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என அச்சம் தெரிவித்தார்.

News April 4, 2024

இந்தியாவின் தங்கக் கையிருப்பு அறிவோமா?

image

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளில் 35,976 டன் தங்கம் கையிருப்பாக இருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்க மத்திய வங்கியில் 8,133 கோடி டன் தங்கம் உள்ளது. ஜெர்மனியில் 3,352 டன்னும், இத்தாலியில் 2,451 டன்னும், பிரான்சில் 2,437 டன்னும், ரஷ்யாவில் 2,329 டன்னும், சீனாவில் 2,257.5 டன்னும், சுவிட்சர்லாந்தில் 1,040 டன்னும், ஜப்பானில் 846 டன்னும், இந்தியாவில் 817 டன் தங்கமும் கையிருப்பாக உள்ளன.

error: Content is protected !!