News April 4, 2024
ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஆன்மாவின் கிரகமாக கருதப்படும் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு புதன், ராகு உள்ளதால் சூரியனின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் கடகம், துலாம், தனுசு, மகர ராசியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க உள்ளனர். கொடுக்கல் வாங்கலில் தகராறு, பண முடக்கம், தொழிலில் சுணக்கம், பண வரவு இல்லாதது என பல்வேறு சிக்கல்களை இந்த ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
Similar News
News February 10, 2026
அன்புமணி கையில் மாம்பழம்! ராமதாஸ் அடுத்த திட்டம் என்ன?

ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்றும், அவருக்கே மாம்பழம் சின்னம் சொந்தம் எனவும் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது. பாமக தொடர்பான வழக்குகளில் ராமதாஸ் பின்னடைவு சந்தித்து வருகிறார். இதனால் கட்சி (பாமக), சின்னம் இல்லாமல் ராமதாஸ் தரப்பு வரும் தேர்தலில் எப்படி எதிர்கொள்ளப்போகிறது; எதன் அடிப்படையில் கூட்டணி அமைக்கும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
News February 10, 2026
மீண்டும் கைவிடப்பட்ட இஷான் கிஷன்

2025-26ஆம் ஆண்டுக்கான BCCI-யின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். தற்போது, ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் சேர்த்த BCCI, இஷான் கிஷனை இணைக்கவில்லை. இதனையடுத்து, சிறப்பாக விளையாடும் அவரை மீண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
News February 10, 2026
டிவி சேனலை தொடங்கும் சீமான்

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.


