news

News April 5, 2025

74 படகுகளை மூழ்கடிக்க இலங்கை முடிவா?

image

பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2018–2020 வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் 74 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அவற்றை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் தமிழக மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

News April 5, 2025

IPL: இன்று டபுள் டமாக்கா!

image

இன்று 2 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதுகின்றன. ருதுராஜ் இல்லாததால் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் எனத் தகவல். தொடர் தோல்விகளில் இருந்து சென்னை மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

News April 5, 2025

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

image

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடுகள் பட்டியலில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று. அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2025

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு படங்கள்

image

பிறமொழி படங்களின் இன்ஸ்பிரேஷனில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். *அவ்வை சண்முகி: 1993ல் வெளியான ஹாலிவுட் படமான Mrs. Doubtfire. *கஜினி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Memento. *தீபாவளி: கொரிய படமான Moment to Remember. *விருதகிரி: 2008ல் வெளியான ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான Taken. ஜிகர்தண்டா: கொரிய கேங்ஸ்டர் படமான Dirty Carnivel.

News April 5, 2025

போலீசில் 1,299 பணியிடங்கள்.. சம்பளம் ₹1.16 லட்சம்

image

தமிழ்நாடு போலீஸில் 1,299 SI, 2ஆம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்து, 20- 30 வயதுடையோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹36,900 -₹1,16,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் துறை ரீதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தனித்தனியாக எழுத்து தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து ஏப்ரல் 7 முதல் மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News April 5, 2025

7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2025

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை?

image

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் பழனி எம்எல்ஏ செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், அப்பணிகள் முடிந்ததும் மாற்றுப்பாதை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News April 5, 2025

இன்று மின்வாரிய சிறப்பு முகாம்

image

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT

News April 5, 2025

குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா?

image

வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்கள் மூலம் குழந்தைகளின் இருமலை குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால், அது சளியை மெல்லியதாகவும், வெளியேற்றவும் உதவுகிறது. நீராவி பிடிக்கும் சிகிச்சையின் மூலம் தொண்டை, மார்பில் உள்ள சளியை தளர்த்தலாம். வெதுவெதுப்பான மூலிகை டீ, சூப் அல்லது இஞ்சி தண்ணீர் கொடுக்கலாம்.

News April 5, 2025

ஜிவி- சைந்தவிக்கு டைவர்ஸ் வழங்குமா கோர்ட்?

image

விவாகரத்து வழக்கு தொடர்பாக ஜி.வி. பிரகாஷ்குமாரும், சைந்தவியும் வரும் செப்.25ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வழங்கும் முன் இருவரும் நேரில் ஆஜராவது முக்கியம். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருந்தால், அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும். இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தை நாடினர்.

error: Content is protected !!