News April 5, 2025
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு படங்கள்

பிறமொழி படங்களின் இன்ஸ்பிரேஷனில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம். *அவ்வை சண்முகி: 1993ல் வெளியான ஹாலிவுட் படமான Mrs. Doubtfire. *கஜினி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Memento. *தீபாவளி: கொரிய படமான Moment to Remember. *விருதகிரி: 2008ல் வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் படமான Taken. ஜிகர்தண்டா: கொரிய கேங்ஸ்டர் படமான Dirty Carnivel.
Similar News
News July 9, 2025
இந்த ஹீரோ யார் தெரிகிறதா?

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தற்போது ஹேமந்த் ராவ் இயக்கும் ‘666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவராஜ்குமாரின் லுக் எப்படி இருக்கும் என படக்குழு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. இதில் கையில் கன்னுடன், சீரியசாக தெரியும் அவரை பார்க்க அடையாளம் தெரியவில்லை. இதற்கிடையே சிவண்ணாவின் லுக்கை பார்த்தீங்களா என ரசிகர்கள் இந்த போட்டோவை டிரெண்ட் செய்கின்றனர். லுக் எப்படி?
News July 9, 2025
ஜெ. தம்பியாக நான் அரசியல் செய்தவன்: திருமாவளவன்

அதிமுக தோழமை கட்சி என்பதால்தான் கூட்டணி குறித்து விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக ஒரு பொருந்தா கூட்டணி என திருமா கூறியதற்கு, ‘எங்கள் கூட்டணி பற்றிக் கூற அவர் யார்?’ என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அதற்கு பதிலளித்த திருமா, பாஜகவால் ADMK பாதிக்கப்படக்கூடாது என்றார். மேலும், தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கே தெரியும் என்றார்.
News July 9, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.