India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. உ.பி-யில் உள்ள இந்த 2 தொகுதிகளில் நேரு குடும்பத்தினரே தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். அந்த வகையில், அமேதியில் ராகுலும், ரேபரேலியில் பிரியங்காவும் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த முறை அமேதியில் போட்டியிட்ட ராகுல், சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

நடிகர் அஜித்தின் 54ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித்துக்கு மிகவும் பிடித்த டுகாட்டி மாடல் பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ₹23 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் ஹோட்டலில் சாப்பிட வந்த 2 பேரை வடமாநில ஊழியர்கள் உருட்டுக் கட்டை, கரண்டியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த 2 பேர், அங்கிருந்த சேர்களில் அமர்ந்துள்ளனர். இதைக்கண்ட ஊழியர்கள், வேறு சேர்களில் அமரும்படி தரக்குறைவான வார்த்தையால் பேசியதாகத் தெரிகிறது. வாடிக்கையாளர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்து தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

மேஷ ராசியில் இதுவரை பயணித்து வந்த குரு பகவான் சற்று நேரத்தில் ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார். இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் குரு பகவானை மனதில் நினைத்து வழிபட்டால் போதும், துன்பங்கள் விலகி அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அதுதொடர்பான புகைப்படம், வீடியோவையும் படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

டிஜிட்டல் கரன்சியான பிட்-காயின் கடந்த ஒரு மாதத்தில் ₹12 லட்சம் மதிப்பை இழந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதன் மதிப்பு சுமார் ₹6 லட்சம் சரிந்துள்ளது. நேற்று மாலை ₹53.5 லட்சத்துக்கு வர்த்தம் ஆன ஒரு பிட்-காயின், தற்போது ₹47.5 லட்சத்துக்கு மட்டுமே வர்த்தகம் ஆகிறது. அமெரிக்க பொருளாதார முடிவுகள் பிட்-காயினின் விலையை பாதித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமாகிறது. ஏற்கெனவே, 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர் என அவரின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் சிறந்து விளங்கிய துறைகள், அவரின் சாதனைகளும் அதில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மாநிலம் துப்ரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தனது சொந்த நலன்களை மனதில் வைத்து செயல்படுவதாகவும், மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்றும் விமர்சித்தார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனி நபர்கள் வாகனத்தில் போலீஸ், ஊடகம் போன்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்த சமீபத்தில் போலீசார் தடை விதித்தனர். இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் அறிவிப்பில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ரகசியமாக AI ஆய்வுக் கூடத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AI தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. இதற்கு ஆப்பிளும் விதிவிலக்கல்ல. கூகுளில் இருந்து 36 AI நிபுணர்களை பணியில் அமர்த்தி, ரகசிய ஆய்வு கூடம் மூலம் புதிய தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.