News May 1, 2024

70 கோடி மக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பு

image

நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மாநிலம் துப்ரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தனது சொந்த நலன்களை மனதில் வைத்து செயல்படுவதாகவும், மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்றும் விமர்சித்தார். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Similar News

News December 14, 2025

தேனி: குடி போதையால் பறிபோன இளைஞர் உயிர்.!

image

உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (30). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவரது மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் அதிகமாக குடித்துவிட்டு வீட்டில் உறங்கிய போது உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 14, 2025

ஸ்குவாஷ் WC: இந்தியா அபாரம்

image

சென்னையில் நடக்கும் SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பையில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அரையிறுதியில் நடப்பு சாம்பியனான எகிப்துடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. இதில் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங், அபய் சிங் தங்களது ஒற்றையர் போட்டிகளில் அபார வெற்றி பெற்றனர். 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா, இறுதிப்போட்டியில் ஹாங்காங்குடன் மோதுகிறது.

News December 14, 2025

மீண்டும் அஜித்துடன் இணையும் ரெஜினா கசாண்ட்ரா

image

‘AK 64’ படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரேஸிங்கில் உள்ள அஜித் உடன் ஆதிக்கும் சில நேரங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!