news

News April 12, 2025

ஃபயர் விடும் ‘ரெட் டிராகன்’.. அதிகரிக்கும் காட்சிகள்!

image

அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள குட் பேட் அக்லி படத்தின் காட்சிகளை தியேட்டர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்களில் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த விடுமுறை நாள்களிலும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. இதனையொட்டி, படத்தின் திரைகள் மற்றும் காட்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் அதிகரித்துள்ளனர். நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News April 12, 2025

பாமகவுக்கு நானே தலைவர்.. அன்புமணி அறிக்கை

image

பாமகவுக்கு தாமே தலைவராக தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சி விதிப்படி பொதுக்குழுதான் தம்மை 2022இல் தலைவராக தேர்ந்தெடுத்ததாகவும், அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், ஆதலால் தலைவராக தாம் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் அன்புமணி கூறியுள்ளார். 2026 தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டியது தமது கடமை என்றும், அது தமது தலையாய பணியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 12, 2025

சோலார் பவர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து: அரசு

image

வயலில் சோலார் பம்ப் செட் அமைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனைத்து மின்சார வாரிய கள அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும், அதில் இலவச மின்சாரம் கோரி வந்துள்ள புதிய விண்ணப்பங்கள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிராகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.

News April 12, 2025

தினசரி இதை செய்யலாம்ல…

image

➤ தினசரி 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
90% பேரை விட உங்களின் கவனக்குவிப்பு சிறப்பாக இருக்கும்.
➤ தினசரி 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள்.
90% பேரை விட நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
➤ தினசரி 20 நிமிடமாவது படியுங்கள்.
90% பேரை விட அதிக விஷயங்கள் அறிந்தவராக இருப்பீர்கள்.

News April 12, 2025

பிரபல கதக் கலைஞர் குமுதினி மறைவு: PM மோடி இரங்கல்

image

நாட்டின் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர் <<16076327>>குமுதினி மறைவுக்கு<<>> பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து X-ல் பதிவிட்டுள்ளார். அதில், கலாசாரத்தின் அடையாளமாக இருந்தவர் குமுதினி லக்கியா. பாரம்பரிய நடனங்கள் மீது அவர் கொண்ட ஆர்வம் அவரது படைப்புகளில் வெளிப்பட்டதாகவும், பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அன்னாரின் குடும்பத்துக்கு தன் ஆழ்ந்த இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

அச்சுறுத்தும் கல்லீரல் கொழுப்பு.. தீர்வு என்ன?

image

அலுவலகத்தில் எந்நேரமும் அமர்ந்த நிலையில் பணிபுரிவோர் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் கல்லீரல் கொழுப்பும் (Fatty liver) ஒன்று. இதற்கு வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கத்திலும் சிறிய மாற்றம் செய்தாலே தீர்வு காண முடியும். அதாவது, அன்றாடம் உடற்பயிற்சி, மனஅழுத்தம் இல்லாமல் பார்த்து கொள்வது, உடல் எடையை குறைப்பது, கொழுப்பில்லா உணவுகளை உட்காெள்வது போன்றவற்றை கடைபிடித்தால் தீர்வு காணலாம்.

News April 12, 2025

துவாதஷ் யோகம்: பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்தில் சூரிய, சனி இருவரின் பெயர்ச்சி காரணமாக துவாதஷ் யோகம் உருவாகிறது. இதனால் அதிக பலன்கள் பெறும் 3 ராசிகள்: *மிதுனம்: தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும், நிதிநிலை மேம்படும், மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும் *கடகம்: மகிழ்ச்சி அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கை சிறக்கும், வேலையில் முன்னேற்றம் *கும்பம்: குடும்ப வாழ்க்கை சிறக்கும், ஆரோக்கியம் மேம்படும், சிக்கல்கள் வந்து நீங்கும்.

News April 12, 2025

அன்னிய செலாவணி ரூ.58.20 லட்சம் காேடியாக உயர்வு

image

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.58.20 லட்சம் காேடியாக அதிகரித்துள்ளது. ஏப்.4 நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு எவ்வளவு இருந்தது என்பது குறித்த புள்ளி விவரத்தை RBI வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.86,096 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாலரை RBI அதிகம் வாங்குவது, டாலர் அல்லாத சொத்துக்களின் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

News April 12, 2025

வானில் தோன்றும் அற்புதம்.. பிங்க் மூன் பார்க்க ரெடியா..!

image

ஏப்ரலில் வரும் முழு நிலவு ‘பிங்க் மூன்’ என அழைக்கப்படும். கிழக்கு வட அமெரிக்காவில் வசந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்தில் இந்த நிலவு தோன்றுவதால் ‘பிங்க் மூன்’ எனப்படுகிறது. உண்மையில் இது பிங்க் நிறத்தில் இருக்காது. வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அமெரிக்காவில் இன்றிரவு தோன்றும் பிங்க் மூன், இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணிக்கே தெரியும். மிஸ் பண்ணிடாதீங்க!

News April 12, 2025

16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை கொட்டும்

image

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதனைக் காணலாம். *இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, மதுரை, சிவகங்கை *இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராமநாதபுரம். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!