News April 12, 2025
தினசரி இதை செய்யலாம்ல…

➤ தினசரி 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
90% பேரை விட உங்களின் கவனக்குவிப்பு சிறப்பாக இருக்கும்.
➤ தினசரி 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள்.
90% பேரை விட நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
➤ தினசரி 20 நிமிடமாவது படியுங்கள்.
90% பேரை விட அதிக விஷயங்கள் அறிந்தவராக இருப்பீர்கள்.
Similar News
News July 8, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரவிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் வாக்கிங் சென்று மக்களிடம் பரப்புரை செய்த இபிஸ், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், கூட்டணியில் பல ரகசியங்கள் இருப்பதாகவும், சூழலுக்கு தகுந்தார்போல் பல கட்சிகள் வந்து சேரும் என்றார்.
News July 8, 2025
தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடு: TRB ராஜா

இந்தியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் கூறி, அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 2 & 3-வது இடங்களில் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. 4-வது இடத்தை கர்நாடகா & டெல்லி ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன.
News July 8, 2025
ஆகாஷ் போட்டுடைத்துவிட்டார்.. எமோஷனலான அக்கா

ஆகாஷ் ஒரு எமோஷனலில் பொதுவெளியில் போட்டுடைத்துவிட்டார் என்று அவரது அக்கா கூறியுள்ளார். இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு, தனது அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ச்சிபொங்க பேசினார் ஆகாஷ் தீப். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவரது அக்கா, தீப் என் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ந்துள்ளார்.