India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததால், இந்தி நடிகர் கோவிந்தா கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது. சுமார் 400 படங்களில் நடித்துள்ளவர் மூத்த நடிகர் அம்ரிஷ் புரி. அவருடன் இணைந்து நடித்தபோது, 9 மணி நேரம் தாமதமாக கோவிந்தா வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அம்ரிஷ் புரி, கோவிந்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்பிறகு, இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் தலைவர் திருமா அறிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம் என சூளுரைத்த அவர், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தேர்தல் முரண்கள் உண்டு; ஆனால் சமூகநீதி என்ற புள்ளியில் இரு கட்சிகளும் இணைந்துள்ளன. தமிழ்நாட்டில் 2வது இடம் பிடிக்க பாஜக பல்வேறு சதிகளை செய்வதாக விமர்சித்தார்.

கோவையில் நேற்று பிரதமரின் ரோடு ஷோவில் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டது தொடர்பாக பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் சிறுவர்கள், குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இருந்தும் நேற்று நடைபெற்ற பாஜக பரப்புரையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

‘சைத்தான்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் நேற்று சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி தேதி மார்ச் 30 ஆகும்.

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அதிருப்தியடைந்த பசுபதி பராஸ், இன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவில் மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2005-06 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களை ஆராய்ந்ததில், மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கை 66%ல் இருந்து 72.1%ஆக அதிகரித்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு தனிநபர் சராசரியாக சாப்பிடும் மீனின் அளவு 12.3 கிலோவாக உயர்ந்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக-பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விசாரித்தபோது, அதிமுகவுடன் 7+1 பங்கீட்டை நிறைவு செய்த பாமகவை தங்கள் பக்கம் இழுக்க 10+1 தொகுதிகளுடன், ஆட்சி அமைந்ததும் மத்திய அமைச்சர் பதவி பற்றி முடிவு செய்யலாம் என பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பெங்களூருவில் பெண் ஒருவரிடம் ரூ.3.9 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 171வது படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வு நடப்பதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிச் சென்ற மிருதுளாவிடம், ஒரு கும்பல் பணம் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் ( ஜார்கண்ட் ஆளுநர்) கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், தமிழிசை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.