News March 19, 2024

Breaking: தமிழிசை-க்கு பதில் ஆளுநராக தமிழர் நியமனம்

image

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் ( ஜார்கண்ட் ஆளுநர்) கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், தமிழிசை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 19, 2026

BIG FLASH: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $91 அதிகரித்து $4,979-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $3 அதிகரித்து $77-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ₹2,640 விலை குறைந்தது கவனிக்கத்தக்கது.

News February 19, 2026

FLASH: நள்ளிரவில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

image

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட உடைமைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் <<19154691>>காரைக்கால் மீனவர்கள் 25 பேரை <<>>கைது செய்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

News February 19, 2026

மகளிருக்கு மாதம் ₹5000 வழங்கலாம்: கார்த்தி சிதம்பரம்

image

மகளிருக்கு கொடுக்கும் பணம் அரசின் கடன் சுமையை அதிகரிக்கும் என்றாலும், வரிகள் மூலம் அந்த பணம் அரசுக்கு வந்துவிடும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பெண்களுக்கு மாதம் ₹2,500 கொடுப்பது நல்ல பொருளாதார யுக்தி என தெரிவித்த அவர், பெண்கள் மளிகை கடைகளில்தான் இதை செலவு செய்ய போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மாதம் ₹5000 கொடுத்தாலும் தப்பில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!