news

News March 17, 2025

TNPSC குரூப்-4 தேர்வு புதிய அப்டேட்!

image

குரூப்-1, குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024இல் வெளியிடப்பட்ட நடப்பாண்டுக்கான தேர்வு திட்டத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டபடி ஏப். மாதத்தில் குரூப்-1, குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு எழுத நீங்கள் ரெடியா?

News March 17, 2025

தக்காளி, பச்சை மிளகாய் விலை சரிவு.. கலக்கத்தில் விவசாயிகள்

image

வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக காய்கறிகள் விலை சரிவைக் கண்டுள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் சந்தையில் வரலாறு காணாத வகையில் பச்சை மிளகாய் விலை கிலோ ₹10ஆக குறைந்துள்ளது. அதேபோல், தருமபுரியின் வெள்ளிச்சந்தை, கிருஷ்ணகிரியின் ராயக்கோட்டையில் ஒரு கிலோ தக்காளி ₹3க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கண்ணீருடன் சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

News March 17, 2025

சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

image

சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். சந்திரயான் 3 திட்டம் மூலம் 25 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவரும், விக்ரம் லேண்டரும் நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சந்திரயான் 5 திட்டத்தில் 250 கிலோ ரோவர் எடுத்துச் செல்லப்படும். ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீது விவாதம்

image

TN சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார்.

News March 17, 2025

ஒருவாரம் வெயில் சுட்டெரிக்குமாம்!

image

TNல் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அதன் தாக்கத்தை அதிகமாக உணர முடியுமாம். குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என கூறப்படுகிறது. வெளியே செல்லும்போது குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News March 17, 2025

நாய்க்கடித்தால் அலட்சியம் வேண்டாம்…

image

தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்க் கடித்தால் தாமதிக்காமல் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காயம் ஏற்பட்ட பகுதியில் 15 நிமிடங்களுக்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். நாய்க் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். ரேபிஸ், இம்யூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு ஹாஸ்பிடலில் இலவசமாகவே கிடைக்கின்றன. SHARE IT!

News March 17, 2025

தவாகவில் இணைந்த ஜெகதீச பாண்டியன்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், கூண்டோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர். சென்னையில் நடந்த இணைப்பு விழாவில், நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள், வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்துள்ளனர். இதன்பின் அவர்கள் பேசுகையில், அனைவரும் தமிழ் தேசிய பாதையில் பயணிப்போம்; அதேசமயம், பெரியாரையும் போற்றுவோம் என கூறியுள்ளனர்.

News March 17, 2025

குமரி அனந்தன் ஹாஸ்பிடலில் அனுமதி

image

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு
மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக, இயற்கை, யோகா ஹாஸ்பிடல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேல் சிகிச்சைக்காக வேலூர் நறுவி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே, சென்னையில் உள்ள ஹாஸ்பிடலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News March 17, 2025

5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அதேவேளையில், மார்ச் 20ஆம் தேதி வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

News March 17, 2025

இந்தியாவா? பாகிஸ்தானா? PM மோடியின் நச் பதில்

image

USAவைச் சேர்ந்த விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ் நிகழ்ச்சியில் PM மோடி பங்கேற்றார். அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளில் எது சிறந்தது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த PM, சில நேரங்களில் முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் IND-PAK அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது எனக் கூறினார்.

error: Content is protected !!