News April 20, 2025
CPI கட்சி மூத்த தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) திபாகர் நாயக் (72) காலமானார். அக்கட்சியின் ஓடிசா மாநில செயலாளராக பல ஆண்டுகள் அவர் பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு குழுப்பினராகவும் இருந்துள்ளார். CPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நுவா துனி’யாவின் ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார்.
Similar News
News July 8, 2025
ரயில் விபத்தில் நுழைந்த மொழி பிரச்னை

கடலூர், செம்மங்குப்பம் விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தினால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் தமிழர்களுக்கு மத்திய அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மொழியும் உள்நுழைந்துள்ளது.
News July 8, 2025
சம்பளத்தில் 33% வரை EMI செலுத்தும் மக்கள்

நடுத்தர வர்க்கத்தினரின் மாத சம்பளத்தில் 33% வரை EMI செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுகிறதாம். இதனால் அடிப்படை தேவைகளான மளிகை, போக்குவரத்து, வாடகை ஆகியவற்றை சிரமப்பட்டு சிக்கனமாக செய்கின்றனராம். இதனால் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், சற்று அதிக வருமானம் பெறுபவர்களும் விதிவிலக்கின்றி 45% வரை லோன் செலுத்துகின்றனராம். இதற்கு விலையேற்றத்திற்கு ஏற்ற சம்பள உயர்வு இல்லாததும் காரணமாம்.
News July 8, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் படையின் மாபெரும் சாதனை!

இந்திய அணி 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. ரன்களின் அடிப்படையில் வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி(336 ரன்கள் வித்தியாசத்தில்) இதுவே. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் 318 ரன்கள் (vs வெஸ்ட் இண்டீஸ், 2019), 3-வது இடத்தில் 304 ரன்கள் (vs இலங்கை, 2017) ஆகிய வெற்றிகள் உள்ளன.