India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் CM ஸ்டாலின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். பின்னர் சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக்காேரி, TN அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தன. இதன்மீது HC உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தனது சோதனையை தொடரலாம் எனவும் HC தெரிவித்தது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21-ல் காலமானார். வருகிற 26-ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற 135 கார்டினல்களில் ஃபெர்ரா, க்ளீமிஸ், கூவாகட் மற்றும் பூலா ஆகிய 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கார்டினல்கள், திருச்சபையின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆவர்.
தன்னை பற்றிய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை பவித்ரா லட்சுமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்னுடைய தோற்றம் குறித்து பலமுறை விளக்கம் அளித்த பின்னும் விமர்சனங்கள் தொடர்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனக்கு உடல்நல சீரியஸான பிரச்னைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பெயரை கெடுக்கும் வகையிலான செய்திகளை பரப்ப வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உ.பி.யில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி, காசி, மதுரா போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள், தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அம்மாநில டிஜிபி பிரஷாந்த் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பஸ், ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முன்னாள் துவக்க ஆட்டக்காரர் Keith Stackpole (84) காலமானார். 1966- 1974 வரை ஆஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். மொத்தம் 7 சதங்கள் உள்பட 2,807 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக நியூசி.க்கு எதிராக 1974-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், டிவி கமெண்டேட்டராகவும், பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
பயனர் ஐடி, கடவுச்சொல் இல்லாமல் இனி எளிதாக வரித்தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகாரப்பூர்வ e-filing இணையதளத்தில் உள்ள ‘e-Pay Tax’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பான் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டு வரித்தாக்கல் செய்யலாம் எனவும், இதனால் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என CBDT விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீரில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீநகரில் இருந்து 4 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. இதில் 2 மும்பைக்கும், 2 டெல்லிக்கும் இயக்கப்படுகிறது. விமான டிக்கெட் விலை உயர்த்தப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து விமான சேவை அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் சட்டப்பேரவையில் பேசுகையில், தன்னிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என வேதனை தொனிக்கும் குரலில் கூறினார். இதையடுத்து திமுக தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை வைத்து, சமூகவலைதளங்களில் விரைவில் அவர் விஜய்யின் தவெக கட்சியில் சேர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்தத் தகவல் உறுதியாகவில்லை.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக அரசு பதவியேற்று கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் புதிய மின் இணைப்புகள், 1.82 லட்சம் புதிய விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதேபோல், புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.