India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலுக்கு சென்று நடிகை ஆண்ட்ரியா வழிபட்டார். பொற்கோயிலுக்கு முன்பாக நின்றபடி எடுத்த ஃபோட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் அவர், சீக்கியர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தற்போது அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பொற்கோயிலுக்கு சென்றது, உணவுகளை ருசித்தது புதுமையான அனுபவத்தை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் கோவில் திருவிழாவின் போது கட்சிக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் உத்தரவிட்டுள்ளது. கொல்லத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயிலில் CPM கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாக புகார் எழுந்திருந்தது. கேரளாவில் கோவிலுக்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களை காட்சிப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் தெரிவித்துள்ளது. சில பரிசோதனைகளுக்குப் பின் அவர் வீடு திரும்பினார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொதுவெளிக்கு வரும்போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ள அவர், தாம் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் புனித மாதமாகிய ரம்ஜானில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். ஒரு மாத நோன்பிற்கு பிறகு பிறை தெரிந்ததும் உற்சாகமாக ரம்ஜானை கொண்டாடி மகிழ்வர். ஒரே ஆண்டில் 2 ரம்ஜான் பண்டிகை வரவும் வாய்ப்புள்ளதாம். 2030ம் ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களில் ரம்ஜான் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன், 1965, 1997 ஆகிய ஆண்டுகளில் 2 ரம்ஜான் கொண்டாடப்பட்டுள்ளதாம்.
உதவி லோகோ பைலட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது சாதாரண காரியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி உதவி லோகோ பைலட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2019ல் இயக்குநராக அவதாரம் எடுத்த நடிகர் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை எடுத்தார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அப்படத்தை மலையாளம் மட்டுமல்லாமல், தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதன் 2ஆம் பாகமான ‘எம்புரான்’ வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் எம்புரானுக்கு முன், மீண்டும் ஒருமுறை பார்க்கும் வகையில் வரும் 20ஆம் தேதி லூசிபர் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
சமீபத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொடர்களின் போது, குடும்பத்தினரை கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் தங்க வைப்பதற்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்தது. ஆனால், வீரர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோலி சாடியுள்ளார். போட்டியில் தோல்வி கண்டால், சோர்ந்து போய் தனியாக உட்கார யாரும் விரும்பமாட்டார்கள் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது. பீன்ஸ் ₹30, சுரைக்காய் ₹8, கத்திரிக்காய் ₹10 முட்டைக்கோஸ் ₹8, கேரட் ₹15, காலிஃப்ளவர் ₹15,சௌசௌ ₹10, கருணைக்கிழங்கு ₹40, வெண்டைக்காய் ₹20, கோவைக்காய் ₹25 சாம்பார் வெங்காயம் ₹25, முள்ளங்கி ₹8, அவரைக்காய் ₹30, தக்காளி ₹10, சேனைக்கிழங்கு ₹20க்கும் விற்பனை செய்யபடுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.