news

News April 24, 2025

ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் பாதியாக சரிவு

image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் சரிந்துள்ளது. டெல்லி-ஸ்ரீநகருக்கு சென்று வரும் கட்டணம் ரூ.24,000 வரை அதிகரித்திருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பயணிகள் முன்பதிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் ரூ.11,200ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை-ஸ்ரீநகர் இடையேயான கட்டணம் ரூ.19,960ஆக இருந்தது. அக்கட்டணம் 51% சரிந்து ரூ.9,775ஆக குறைந்துள்ளது.

News April 24, 2025

+2-க்கு அப்புறம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

image

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு ஒரு சூப்பர் சாய்ஸ். டிப்ளமோவில் தொடங்கி முதுகலை படிப்பு வரை இருக்கிறது. Market Research Analyst, Content Marketer/Manager என பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தொடக்க சம்பளமாகவே ₹25,000 – ₹40,000 வரை வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் தளங்களில் இலவசமாக கிளாஸ் எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

News April 24, 2025

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

image

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

News April 24, 2025

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

image

5 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் பாமாயில் இறக்குமதி உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப்பங்கு அதிகரித்ததால் வீழ்ச்சியடைந்த பாமாயில் இறக்குமதி, வருகிற ஜூலை – செப்டம்பரில் 7 லட்சம் டன் அதிகரிக்கும் என எண்ணெய் டீலர்கள் கூறுகின்றனர். தற்போது சோயாபீன் எண்ணெய் விலையை விட பாமாயில் விலை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்துள்ளதும் இறக்குமதி உயர்வுக்கு காரணம்.

News April 24, 2025

பஹல்காம் விவகாரத்தில் இந்தியாவின் அடுத்த பதிலடி!

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் J&K காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. உதம்பூர் பசந்த்கரில் இன்று காலை நடத்தப்பட்ட என்கவுன்டரில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

News April 24, 2025

‘மெட்ராஸ் யூனிவர்சிட்டி’ விண்ணப்பம் தொடங்கியது!

image

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் 2025-2026 கல்வியாண்டில் முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹354-ஐ ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். மேலும், யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் படிப்புகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வரும் ஜூலை 7-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

News April 24, 2025

BREAKING: சட்டப்பேரவைக்கு செல்லாத செந்தில் பாலாஜி!

image

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்(SC) 4 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவர் இன்று சட்டப்பேரவைக்கு செல்லவில்லை. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? எது வேண்டும் என்பது குறித்து 4 நாள்களில் முடிவெடுக்க SC கெடு விதித்திருந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 24, 2025

பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்

image

பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ X பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

News April 24, 2025

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்

image

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகளும் சரிந்தன. இதையடுத்து சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து 79,920-ஆக வர்த்தகமாகிறது. நிப்டி 24,284 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. பங்குச்சந்தைகள் கடந்த 7 நாள்களாக உயர்வுடன் காணப்பட்டன. இதனால் சென்செக்ஸ் நேற்று 80,000 புள்ளிகளை கடந்தது.

News April 24, 2025

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!