News April 24, 2025
ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் பாதியாக சரிவு

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் சரிந்துள்ளது. டெல்லி-ஸ்ரீநகருக்கு சென்று வரும் கட்டணம் ரூ.24,000 வரை அதிகரித்திருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பயணிகள் முன்பதிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் ரூ.11,200ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை-ஸ்ரீநகர் இடையேயான கட்டணம் ரூ.19,960ஆக இருந்தது. அக்கட்டணம் 51% சரிந்து ரூ.9,775ஆக குறைந்துள்ளது.
Similar News
News November 18, 2025
21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை

இந்தியாவில் இன்றும் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் லடாக்கில் உள்ள மான் & மெராக் என்னும் 2 தொலைதூர கிராமங்களில் தனது சேவையைத் தொடங்கியது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் சுமார் 21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதிகபட்சமாக ஒடிசாவில் 6,000 கிராமங்களில் நெட்வொர்க் சேவை இல்லாமல் உள்ளன.
News November 18, 2025
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு.. தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சி

கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்து மத்திய அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 20 லட்சம் மக்கள் தொகை இல்லாத நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க முடியாது எனக்கூறி, தமிழக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மக்கள் தொகை மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி என்ன நினைக்கிறீங்க?
News November 18, 2025
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைளை நிறைவேற்றுக: தவெக

<<18316826>>வேலை நிறுத்த போராட்டத்தில்<<>> ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அரியணை ஏறிய திமுக, தற்போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தல் விடுப்பதாக தவெக சாடியுள்ளது. மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆதரித்ததாகவும் தவெக குறிப்பிட்டுள்ளது.


