India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஷ்ய அதிபராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு, புதினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதின் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யப் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் தென்னிந்திய சினிமாவில் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். அது யாஷின் ‘டாக்ஸிக்’ படமாகத் தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதி தெரிவித்தது போல, திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதா, இல்லையா என கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, வேட்பாளர்கள் தேர்வில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியிருந்தார். ஆனால், வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களே. இதனால், அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், வேர்க்குரு, நீர் கட்டி, கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்களில் தர்கார்த்துக் கொள்ள, தண்ணீர், இளநீர், மோர், திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக இடங்களில் போட்டியிடுவதை காட்டிலும் எத்தனை இடங்களில் வெல்வோம் என்பதே முக்கியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் 2 இடங்களில் அமமுக போட்டியிடுகிறது. இது தொடர்பாக பேசிய அவர், “எங்களுக்கு அதிக இடங்கள் தருவதாக கூறினார்கள். ஆனால், கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு இடம் கொடுத்தால் கூட போதும் என்று பாஜகவிடம் முன்பே கூறிவிட்டேன்” என்றார்.

ஐபிஎல் தொடருக்கான 2ஆவது புதிய ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், 2 வெவ்வேறு நிற ஜெர்சிகள் அணிவதை RCB அணி வழக்கமாக கொண்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான பிரதான (சிவப்பு) ஜெர்சியை நேற்று அறிமுகம் செய்த RCB அணி, இன்று பச்சை நிறம் கொண்ட 2ஆவது ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பெயர் மாற்றம், 2 புதிய ஜெர்சிகள் என புத்தம் புதிதாக களமிறங்குவதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை மாற்றியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் முக்கியமானப் போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை 7இல் நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 நாட்களுக்கு முன்பே தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன்படி, எஸ்டிபிஐ கட்சிக்கு அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.