News March 20, 2024
RCB அணியின் பச்சை நிற ஜெர்சி வெளியீடு

ஐபிஎல் தொடருக்கான 2ஆவது புதிய ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், 2 வெவ்வேறு நிற ஜெர்சிகள் அணிவதை RCB அணி வழக்கமாக கொண்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான பிரதான (சிவப்பு) ஜெர்சியை நேற்று அறிமுகம் செய்த RCB அணி, இன்று பச்சை நிறம் கொண்ட 2ஆவது ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பெயர் மாற்றம், 2 புதிய ஜெர்சிகள் என புத்தம் புதிதாக களமிறங்குவதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News February 19, 2026
மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

புதிய மாவட்டங்கள் பிரிப்பதை மறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஸ்டாலின் தலைமையிலான நடப்பு ஆட்சியில் தற்போது வரை புதிய மாவட்டம் உருவாக்குவதை அவர் மறந்துவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த கும்பகோணம் தனி மாவட்டமாக உதயமாகும் என்ற வாக்குறுதி நிறைவேறாதது அங்கு திமுகவினரையே அப்செட் ஆக்கியுள்ளதாம். முன்னதாக MGR(5), கருணாநிதி(9), ஜெயலலிதா(7), EPS(6) என CM ஆக தங்களது ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்கியிருந்தனர்.