news

News March 24, 2024

IPL: இன்று இரண்டு போட்டிகள்

image

ஐபிஎல்-2024 தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 2ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிகளை ஜியோ சினிமா ஆப் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.

News March 24, 2024

அமீருக்கு ஆதரவாக நிற்கும் வெற்றிமாறன்

image

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான இயக்குநர் அமீர் பெரும் நெருக்கடிக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. இந்த காரணமாக அவர் நடித்த மாயவலை திரைப்படம் வெளிவர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம். உதவிக் கேட்ட இடங்களில் எல்லாம் பலரும் வம்பு எதற்கு என விலகிக் கொண்டார்களாம். இந்த சூழலில் இயக்குநர் வெற்றிமாறன் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி, ஆதரவாக நிற்கிறாராம்.

News March 24, 2024

காங்கிரஸ் வேட்பாளர் முதற்கட்ட பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 7 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். 1. திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில் 2.குமரி – விஜய் வசந்த் 3.விருதுநகர் – மாணிக்கம் தாகூர் 4.சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் 5.கரூர் – ஜோதிமணி 6.கிருஷ்ணகிரி – கோபிநாத் 7.கடலூர் – விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

News March 24, 2024

அம்பேத்கரின் பொன்மொழிகள்

image

✍கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்.✍நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.✍சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.✍தலைவிதி என்ற எண்ணமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.✍கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
– அண்ணல் அம்பேத்கர்

News March 24, 2024

பாஜகவை பழிதீர்க்கும் முனைப்பில் உத்தவ் தாக்கரே

image

மகாராஷ்டிராவில் சிவசேனா உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. பால் தாக்கரேயின் வில் அம்பு சின்னத்தையே எதிரணியிடம் இழந்து நிற்கும் அவருக்கு வாழ்வா சாவா என்ற நிலையை தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. ED போன்ற விசாரணை அமைப்புகளின் சோதனை உள்ளிட்ட சவாலை எதிர்கொண்டுள்ள அவர், பாஜகவை தேர்தலில் எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென பழிதீர்க்கும் தீவிர முனைப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

News March 24, 2024

சென்னையில் ஐ.பி.எல் பைனல் போட்டி நடக்குமா?

image

நடப்பு ஐ.பி.எல் (17ஆவது சீசன்) தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டதாம். அதன்படி, மே 26ஆம் தேதி சென்னையில் பைனல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். குவாலிபையர், எலிமினேட்டர் போட்டிகள் குஜராத்தில் நடைபெறும் என அறியமுடிகிறது.

News March 24, 2024

மாறுபட்ட கதாபாத்திரத்தில் நிவின் பாலி

image

இயக்குநர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், நிவினுக்கு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

News March 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் – 24 | பங்குனி – 11
▶கிழமை: ஞாயிறு | திதி: பௌர்ணமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:00 – 04:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மதியம் 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News March 24, 2024

ரயில் நிலையங்களில் பாரத் அரிசி விற்க அனுமதி

image

மத்திய அரசின் பாரத் அரிசி & கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3 மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய அனுமதி ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். கிலோ அரிசி ₹29-க்கும், கிலோ கோதுமை ₹27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

News March 24, 2024

இதெல்லாம் தேவையில்லாத வேலை மிஸ்டர் ராணா?

image

KKR அணியின் ஹர்ஷித் ராணாவின் செயலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், ராணா பறக்கும் முத்தமிட்டார். இதனைக் கண்ட கவாஸ்கர், “இதெல்லாம் தேவையில்லாத வேலை மிஸ்டர் ராணா. பேட்மேன்கள் பவுண்டரி அடிக்கும்போது, உங்களுக்கு முத்தமிட்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் தாங்குவீர்களா” என்று கூறினார்.

error: Content is protected !!