India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் படிக்காதவர்களோடு ஒப்பிடுகையில் படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ILO அறிக்கையில், ‘பட்டப்படிப்பு முடித்தோரின் வேலையின்மை விகிதம் 29.1% ஆக உள்ளது. அதே நேரம், படிக்காதவர்களின் வேலையின்மை விகிதம் 3.4% ஆக உள்ளது. இது தவிர, மேல்நிலை படிப்பு வரை முடித்தோரின் வேலையின்மை விகிதம் 18.4%ஆக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

* புதிதாக வருமான வரி தாக்கல் செய்வோருக்கு Default Settingsஆக New Regime இருக்கும்.
* வருமான வரியில் 50,000 Standard Deduction திட்டம் இனி New Regimeஇலும் கணக்கிடப்படும்.
* அரசாங்க ஊழியர் அல்லாதோருக்கு Leave encashment tax exemption ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* SBI டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
* அனைத்து விதமான காப்பீடுகளும் இனி டிஜிட்டல் முறையிலேயே செய்யப்படும்.

போதைப்பொருள் புழக்கத்திலிருந்து நமது சமூகத்தை காக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற பெயரில் நமோ செயலி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர், கடந்த சில நாள்களாக பிடிபடும் போதைப் பொருட்களின் தலைமைக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் நுழையும் போதைப்பொருளுக்கு எதிராக போராட பாஜகவே போதும் எனவும் அவர் பேசினார்.

ஐபிஎல் போட்டியில் பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற KKR கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து RCB அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 4 ஆவது இடத்திலும், ஆர்சிபி அணி 6 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக பதிவாகி மக்களை தவிக்கவிட்டது. கரூர் பரமத்தியில் 39.2 டிகிரி, தர்மபுரியில் 39 டிகிரி, சேலத்தில் 38.8 டிகிரி, திருத்தணியில் 38.3, மதுரையில் 38.2 என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரியாக பதிவானது. மார்ச் மாதம் முடியும் முன்பே வெப்பநிலை 40 டிகிரியை தொட்டிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்னையை உருவாக்குவதே திமுகவின் வேலையாக இருக்கிறது’ என பேசியுள்ளார்.

வருமான வரித்துறை சார்பில் பாக்கி வரி ரூ.1823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கும், ரூ.11 கோடி செலுத்துமாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக காங்., தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் பூஜா வஸ்த்ரகர் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் இருக்கும் அந்த புகைப்படத்தில் ‘வசூலி டைட்டன்ஸ்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. வஸ்த்ரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு BCCIயிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அவரது இன்ஸ்ட்டா ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.

கடந்த மாதம் வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ரூ.20 கோடியில் உருவான இப்படம் ரூ.214 கோடி வசூலைக் குவித்து, மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.