news

News March 30, 2024

அரிய சாதனை படைத்தது RCB

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் KKR அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில், RCB அணி அரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, IPL வரலாற்றில் 1,500 சிக்ஸர்களை கடந்த 2ஆவது அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த பட்டியலில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி (1,548) மட்டுமே உள்ளது. இந்தப் போட்டியில் கோலியுடன் இணைந்து கிரீன் தலா நான்கு சிக்ஸர்களை அடித்து இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

News March 30, 2024

விற்பனைக்கு வந்த ஷாவ்மியின் புதிய மின்சார கார்

image

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி நிறுவனம், தனது முதல் மின்சார வாகனமான SU7 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் 30 நிமிடங்களுக்குள் 50,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை ஷாவ்மி SU7 கார் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தொலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பிற சாதனங்களை இணைப்பதற்கான வசதி கொண்ட இந்த காரின் விலை ரூ.24.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

image

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

News March 30, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: களவியல்
▶ அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் ▶ எண்: 1105
▶குறள்:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
▶ பொருள்: ஒருவருக்கு விருப்பமான பொருள் ஒன்று, நாம் நினைக்கும் பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த என் காதலியை கட்டியணைக்கும்போது, அவளது தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

News March 30, 2024

கோப்பையை வெல்லப்போவது யார்?

image

மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா – மாத்யூ எப்டன் ஜோடி முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றது. பைனலில், இவான் – ஆஸ்டின் ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது. அதில் எந்த ஜோடி வெல்லுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News March 30, 2024

மாஸ்கோ தாக்குதல்: தஜிகிஸ்தானில் 9 பேர் கைது

image

மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பிரபல இசை நிகழ்ச்சி அரங்கில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் உள்ளிட்ட 144 பேர் பலியாகினர் (100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்). இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையில், ஏற்கெனவே 11 பேரை ரஷ்யா கைது செய்திருந்தது.

News March 30, 2024

டெல்லி முதல்வர் ஆவதற்கு தயாராகி வரும் மேடம்

image

பீகாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ஏற்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆம் ஆத்மி கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களை கெஜ்ரிவாலும், சுனிதாவும் ஓரங்கட்டிவிட்டார்கள். மத்திய அரசை விமர்சித்து வரும் ‘மேடம்’ (சுனிதா) முதல்வர் ஆக தயாராகி வருகிறார்” எனக் கூறினார்.

News March 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 30, 2024

ஆஸ்., மக்கள்தொகையை விட இது அதிகம்

image

வேலையில்லாத இந்தியர்களில் 83% பேர் இளைஞர்களாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “2022-23 ஆம் நிதியாண்டில், EPFOஇல் 6.4 கோடி பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்” என்றார்.

News March 30, 2024

BREAKING: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

image

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு இன்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!