News March 30, 2024
தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.
News March 8, 2026
எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.
News March 8, 2026
இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!


