India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2ஆவது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அவரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு அதிமுக கூடுதல் பலம் சேர்க்கும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என பாஜக விமர்சித்துள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு அநியாயங்களை செய்து விட்டு, இப்போது நியாயம் வழங்கப்படுமென கூறுகின்றனர். தேர்தல் அறிக்கையின் சுற்றுச்சூழல் பகுதியில் நியூயார்க் மற்றும் ராகுலுக்கு மிகவும் பிடித்த தாய்லாந்தின் படங்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், ஐதரபாத் மைதானத்திற்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மகேந்திர சிங் தோனியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் CSK அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

அரசுப் பத்திரங்களை (G Sec) வாங்க புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். நிதிக் கொள்கை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், பத்திர சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறினார். இந்த செயலியில் யுபிஐ அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணத்தை அனுப்பி அரசுப் பத்திரங்களை எளிதாக வாங்கி விற்கலாம் என்றார்.

WAY2NEWS பயனர்களின் பொது அறிவுக்கான நாட்டு நடப்புகள் குறித்து தினமும் வீடியோ வடிவில் செய்தி வெளியிடப்படும். தினமும் ஒரு தலைப்பில் வெளியாகும் செய்திகள் TNPSC, SSC, IBPS, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். Way2News வாட்ஸாப் குழுவை பின் தொடர இந்த <

உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற, அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்பால் 17 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக உ.பி., மதரஸா கல்வி வாரிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அலகாபாத் ஐகோர்ட் நீதிமன்றம் கூறியிருந்தது.

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.4,475 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச்சில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதியை இந்தியா நிறுத்துமென மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘கடந்த 65 ஆண்டுகளாக ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறோம். தற்போது, ரசாயன உரங்களுக்கு மாற்றாக நானோ லிக்விட் யூரியா மற்றும் லிக்விட் டி அம்மோனியம் பாஸ்பேட்டை பயன்படுத்த ஊக்குவித்து வருகிறோம். இந்தியாவின் யூரியா உற்பத்தி திறனை 310 லட்சன் டன்களாக அதிகரித்துள்ளோம்’ என்றார்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்திக் காட்டுவோம் என ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததைப்போல ஊடகங்களில் காண்பிக்கப்படுவதாகக் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்ட அதே உணர்வுதான் தற்போதும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.