News April 5, 2024
‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை’

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என பாஜக விமர்சித்துள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு அநியாயங்களை செய்து விட்டு, இப்போது நியாயம் வழங்கப்படுமென கூறுகின்றனர். தேர்தல் அறிக்கையின் சுற்றுச்சூழல் பகுதியில் நியூயார்க் மற்றும் ராகுலுக்கு மிகவும் பிடித்த தாய்லாந்தின் படங்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
Similar News
News April 13, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,060-க்கும், சவரன் ₹1,12,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 1% சரிந்துள்ளதன் விளைவாகவே நம்மூர் சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. கடந்த 3 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News April 13, 2026
தினமும் ஒரு தொகுதிக்கு ₹2.25 கோடி செலவாகிறதா?

ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 300 பூத்-கள் இருக்கின்றன. இதில் ஒரு பூத்தில் 1000 வாக்காளர்கள் வரை உள்ளனர். இதில், குறைந்தது 300 ஓட்டுகள் வரை பெற்றாலே வெற்றிபெற்றுவிடலாம். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் வீடுகளுக்கு துண்டறிக்கை வழங்குவது, கட்சி கொடி ஏந்தி ஊர்வலமாக செல்வது, உணவு போன்றவற்றிக்கு ஒரு பூத்துக்கு தினமும் ₹75,000 மற்றும் 300 பூத்துகளுக்கு ₹2.25 கோடி செலவு ஆகுவதாக கூறப்படுகிறது.
News April 13, 2026
Cinema 360: வசூலில் திணறுகிறதா LIK?

➤ஆஷா போஸ்லேவுக்கு மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது ➤தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து இணையும் படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ➤நடிகை மாளவிகா மோகனன் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் கசிந்துள்ளது ➤ரிலீசான 3 நாள்களில் LIK படம் இந்தியளவில் ₹22.70 கோடி மட்டுமே ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


