news

News April 8, 2024

4,000 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் <>கிளிக்<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

News April 8, 2024

கோர விபத்தில் 94 பேர் பலி

image

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 94 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பரவிவரும் காலரா நோய்க்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும் இடம் மாறி வருகின்றனர். அதற்காக லைசன்ஸ் இல்லாத படகு ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 26 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News April 8, 2024

பாஜக 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்ததா?

image

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் எனக் கூறும் பாஜக 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்ததா? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது என விமர்சித்துள்ளார்.

News April 8, 2024

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை உருவாக்க ஆசை

image

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புவதாக ‘அனிமல்’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர், “மைக்கேல் ஜாக்சனாக நடிப்பது யார்? அவருடன் நடிக்க இருப்பவர்கள் யார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. சரியான ஒரு நடிகன் கிடைத்தால் இந்தப் படத்தை ஹாலிவுட் வரை கொண்டு செல்லலாம்” என்றார்.

News April 8, 2024

தூத்துக்குடியில் போட்டியிட திமுகவில் ஆள் இல்லையா?

image

தன்னைப் பற்றி கனிமொழி கவலைப்படுவது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென்சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிடும் நிலையில் பாஜகவில் ஆள் இல்லாததால் தான், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் போட்டியிடுவதாக கனிமொழி விமர்சித்திருந்தார். இதற்கு, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. இதற்கு, திமுகவில் ஆள் இல்லாதது காரணமா என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

News April 8, 2024

IPL: 137 ரன்னில் சுருண்ட KKR

image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்த KKR அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். CSK தரப்பில் ஜடேஜா 3, தேஷ்பாண்டே 3, முஸ்தஃபிசுர் 2, தீக்ஷனா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். CSK அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

தொடங்கியது கிரகணம். இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

image

இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் சரியாக 9.12 மணிக்கு தொடங்கியது. இரவு 1.25 மணி வரை கிரகணம் தொடரும். இந்த கிரகணத்தால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ராசிகளுக்கு பிரச்னைகள் ஒன்றின் பின் ஒன்றாக தேடி வர இருக்கின்றன. உங்களது செயல்பாடுகளால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

News April 8, 2024

இதை செய்தால் மட்டுமே செங்கலை கொடுப்பேன்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி பிரசாரத்தில் பேசிய உதயநிதி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க பாஜகவினரும், எடப்பாடியும் ஒரு செங்கல் நட்டார்கள். அதை நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டினால் மட்டுமே அந்த செங்கலை திருப்பி கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

News April 8, 2024

அடுத்தடுத்து விக்கெட்டுகளை தூக்கிய ஜடேஜா

image

KKR அணிக்கு எதிரான போட்டியில் CSK வீரர் ஜடேஜா சிறப்பாக பந்துவீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர், 18 ரன்கள் விட்டுக்கொடுத்து KKR அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான நரைன், வெங்கடேஷ் ஐயர், ரகுவன்ஷி ஆகிய மூன்று பேரை அவுட்டாக்கினார். இவரது சிறப்பான பவுலிங்கால் KKR அணி 9 ஓவர்கள் முடிவில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

News April 8, 2024

தேர்தல் முடிந்ததும் ₹1,000 வழங்கப்படும்

image

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வரும் நிலையில், சிலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இது குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தேர்தல் முடிந்ததும் விடுபட்டவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

error: Content is protected !!