News April 8, 2024

கோர விபத்தில் 94 பேர் பலி

image

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 94 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பரவிவரும் காலரா நோய்க்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும் இடம் மாறி வருகின்றனர். அதற்காக லைசன்ஸ் இல்லாத படகு ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 26 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Similar News

News December 10, 2025

தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமனம்

image

தமிழகத்தின் புதிய டிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் உள்ள டிஜிபி வெங்கட்ராமன், 15 நாள்களுக்கு மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து, அவர் பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான அபய்குமார் சிங் IPS-ற்கு கூடுதல் பொறுப்பாக டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

பெண்களை பாதிக்கும் Postpartum depression… சமாளிப்பது எப்படி?

image

பிரசவத்துக்கு பின், பெண்களுக்கு மனச்சோர்வு (Postpartum depression) பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கையாள சில வழிகள் உள்ளன. ➤கணவரிடம் மனதில் தோன்றுவதை பேசுங்கள் ➤குழந்தை தூங்கும் நேரத்தில் நீங்களும் ஓய்வெடுங்கள் ➤வீட்டுவேலை, குழந்தை பராமரிப்பு பணிகளை கணவர் / குடும்பத்தினரிடம் பிரித்துக் கொடுங்கள் ➤சத்தான உணவை சாப்பிடுங்கள் ➤நடைபயிற்சி ➤தேவைப்பட்டால் மனநல ஆலோசகரை அணுகவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

மெல்லிசையாக மமிதா பைஜூ

image

‘DUDE’ திரைப்படம் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற மமிதா பைஜூ, இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அவரது இனிமையான சிரிப்பு, அமைதியான பார்வை, பிரகாசமான முகம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு பார்வையும், ஒரு ராகம் போல மெல்லிசையாக அவரது புகைப்படங்களில் பேசுகின்றன. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!