news

News April 11, 2024

ஆராய்ச்சி மையமாக விளங்கும் இந்தியா

image

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் கண்டுபிடிப்புகளும் அதீத வளர்ச்சி கண்டுள்ளன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தப்படியாக உலகளவில் ஆராய்ச்சி மையமாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 69 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தரவரிசைக்கு பல்கலைக்கழகங்களின் 17.5 மில்லியன் பகுப்பாய்வு முடிவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

News April 11, 2024

இதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை

image

70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவிலான பணம் 22 பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் செய்த அவர், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை என்றார். ஆனால், அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் நாட்டின் மிகப்பெரிய செய்தியாக பரவுவதாக குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக உறுதி அளித்தார்.

News April 11, 2024

நூதன முறையில் உயிரிழந்த கர்ப்பிணி

image

இங்கிலாந்தில் சிரிக்கும் வாயுவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மெர்சர் என்ற 24 வயது கர்ப்பிணி தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். சிரிக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 6 மாத கர்ப்பிணியான மெர்சர், நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாடு காரணமாக நுரையீரல் ரத்த உறைவு பிரச்னையால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 11, 2024

பாஜக தலைவரை முற்றுகையிட்டு மக்கள் ஆவேசம்

image

நாகையில் பாஜகவினரின் வெடியால் ஏற்பட்ட தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்கள் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாச்சியர் அலுவலகம் அருகே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்று வெடித்த வெடியால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கு பரவி எரிந்து நாசமாயின. இதற்கு இழப்பீடு வழங்க எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் பாஜக நிர்வாகியை விடுவிப்போமென மக்கள் ஆவேசமாகினர்.

News April 11, 2024

உலகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறார் முதல்வர்

image

இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே நமது முதல்வர் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கனடா பிரதமரே காலை உணவுத் திட்டத்தை கொண்டுவரப் போவதாக கூறியுள்ளார். இத்திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், மகளிர் விடியல் பயண திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலும் செயல்படுத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

News April 11, 2024

இது ஜி Pay… திமுக புதிய பிரசார யுக்தி

image

தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுகவினரின் போஸ்டர் பிரசாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. திருப்பூரின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி pay என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், Scan செய்யுங்கள் Scam பாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் என்ற பெயரில் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.

News April 11, 2024

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

ராகுல், கார்கே தமிழ்நாடு வருகின்றனர்

image

தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்வதற்காக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழ்நாடு வருகின்றனர். நாளை தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி நெல்லை, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். நாளை மாலை கோவையில் நடைபெறும் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். ஏப்.15இல் தமிழ்நாடு வரும் கார்கே கடலூர், புதுச்சேரியில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

News April 11, 2024

ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்?

image

உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால், நீரிழிவு நோயாளிகள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியமாகிறது. ஒரு வேளை சர்க்கரை அளவு குறைந்தால் வாந்தி, மயக்கம் அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். இதனால், சுயநினைவை இழக்க நேரிடலாம். இதற்கு தீர்வாக மாவுச்சத்து நிறைந்த திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

News April 11, 2024

வெயிலின் தாக்கத்தால் வேகமாக பரவும் நோய்

image

கடும் வெயிலின் காரணமாக கேரளாவில் கடந்த 10 நாள்களில் 900க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தினசரி 90 பேர் பாதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இங்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் பகல் வேளையில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!