news

News March 15, 2025

ஒருபோதும் USAவின் அங்கமாக இருக்க மாட்டோம்: கனடா PM

image

கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, பதவியேற்ற முதல் நாளிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், நாட்டின் நலன்களுக்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

News March 15, 2025

வீட்டு, சமையல் வேலைக்கு 1 மணி நேரம் ரூ.49 தான்

image

தனியார் நிறுவனமான அர்பன் கம்பெனி வீட்டு வேலை, சமையல் வேலை வாடகைப் பணியாளர் சேவைகளை மும்பையில் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் விண்ணப்பித்தால், 15 நிமிடங்களில் வேலைக்கு ஆட்கள் வருவர். அவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.49 அளிக்க வேண்டும். இது அறிமுக சலுகையே. பிறகு ரூ.245 ஆகும். மும்பையைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News March 15, 2025

பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

image

மும்மொழிக் கொள்கை குறித்த ஆந்திர துணை முதல்வர் <<15763979>>பவன் கல்யாணின்<<>> கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று கூறுவது மற்றொரு மொழியை வெறுப்பதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது நமது தாய்மொழியையும், தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி என்பதை யாராவது பவன் கல்யாணிடம், எடுத்துச் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.

News March 15, 2025

IMLT20: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்

image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 179 ரன்கள் குவித்தது. சேஸிங்கில் குணரத்னே (66) போராடினாலும், இலங்கை 173 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

News March 15, 2025

கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

image

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் பதவியேற்றுள்ளார். வரும் அக். மாதம் கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் PMஆக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூட்டணிக் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, PM பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ட்ரூடோ விலகினார்.

News March 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 207 ▶குறள்: எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். ▶பொருள்: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

News March 15, 2025

IPLஇல் முதல் சதமடித்த வீரர் யார் தெரியுமா?

image

IPLஇல் முதல் சதம் அடித்த வீரர் யார் என பார்க்கலாம். 2008ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பாேட்டியில் ஆர்சிபி வீரர் பிரெண்டம் மெக்கல்லம் (நியூசிலாந்து) 158 ரன்கள் குவித்தார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஆகும். இந்திய அணி வீரர்களில் முதன்முதலில் சதமடித்தவர் மணிஷ் பாண்டே ஆவார். 2009ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்சுக்காக அவர் 114 ரன்கள் அடித்தார்.

News March 15, 2025

1 ரூபாயில் அரசின் செலவு

image

2025-26ஆம் நிதியாண்டிற்கான TN பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில், ₹1ல் TN அரசின் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செயல்பாடுகளும் பராமரிப்புகளும்- 3.5, மூலதனச் செலவு -11.8, வட்டி செலுத்துதல்- 14.5, உதவித்தொகை, மானியங்கள்- 31.6, கடன் வழங்குதல்- 1.8, ஓய்வூதியம், ஓய்வுக்கால பலன்கள் -8.5, சம்பளங்கள் -18.6, கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.7 பைசா செலவாகிறது.

News March 15, 2025

இன்றைய (மார்ச் 15) நல்ல நேரம்

image

▶மார்ச்- 15 ▶பங்குனி – 1 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 AM – 03:00 AM ▶குளிகை: 06:00 AM- 07:30 AM ▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶நட்சத்திரம் : உத்திரம்.

News March 15, 2025

1 ரூபாயில் தமிழக அரசின் வரவு

image

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில், ₹1ல் TN அரசின் வரவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொதுக்கடன் -31.4, கடன்களின் வசூல், மூலதன வரவு -0.2, மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் -4.9, மத்திய வரிகளின் பங்கு- 12, மாநிலத்தில் சொந்தவரி அல்லாத வருவாய் – 4.9, மாநிலத்தில் சொந்த வரி வருவாய் – 45.6 பைசாவாகும்.

error: Content is protected !!