News April 27, 2025
பஹல்காம் தாக்குதல்; பாஜக ஆதாயம்…TMC எம்பி அட்டாக்

பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.
Similar News
News July 8, 2025
Non Interlocking ரயில்வே கேட் என்றால் என்ன?

கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.
News July 8, 2025
கடலூர் பள்ளி வேன் விபத்து: CM ஸ்டாலின் இரங்கல்

<<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதியதில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்து ICU-வில் உள்ள 3 மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை நேரில் சென்று உதவி, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
News July 8, 2025
விராட்டுக்கு நன்றி சொன்ன ஜோகோவிச்

இங்கி.,ல் உள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் கண்ட போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த போட்டோவைப் பகிர்ந்து ஸ்டார் டென்னிஸ் பிளேயர் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அங்கு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், அதனைக் காண விராட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.