India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்மாவட்டங்களில் இரவு 10 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா-2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. 2021இல் வெளியான புஷ்பா வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஆகஸ்டு 15 அன்று படம் திரைக்கு வரவுள்ளது.

1912இல் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணித்து உயிரிழந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட 15 காரட் தங்கக் கைக் கடிகாரம் ₹12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஜான் ஜேக்கப் ஆஸ்டர், மனைவியுடன் ஹனிமூன் சென்றுவிட்டு டைட்டானிக்கில் திரும்பியபோது கப்பல் விபத்துக்குள்ளானது. உயிரிழந்த அவர் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிகாரத்தை, ஜெர்மனியைச் சேர்ந்த மேரன் கிரென் ஏலத்தில் எடுத்துள்ளார்.

போலி வீடியோக்களை உருவாக்குவதிலும், பரப்புவதிலும் பாஜகவினர் கில்லாடிகள் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், சமூக ஊடகம் மூலம் போலி வீடியோக்களைப் பரப்புவதில் பாஜகவினர் கில்லாடிகள் என்றார். ஆனால் இந்த வேலையை ஒருபோதும் காங்கிரஸ் செய்யாது என்றும், யார் மீதும் காங்கிரஸ் வெறுப்பு காட்டாது என்றும் கார்கே குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்த மூதாட்டி மாயமானதாக அவரது உறவினர் X தளத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது சென்னை வாக்குச் சாவடியில் வாக்களித்த விஜய் சேதுபதியுடன், மூதாட்டி டாக்டர் கெளசல்யா எடுத்த செல்ஃபி வைரலானது. இந்நிலையில், அவரையும், அவரது மகனையும் ஏப்.22 முதல் காணவில்லை எனவும், போலீசார் அவர்களைத் தேடி வருவதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் போட்டியில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. தொடர் தோல்வியைக் கண்டு வரும் மும்பை அணி, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார்? என கமெண்டில் கூறலாம்.

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும், தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் பில்டர் பழுதாகிவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதெனக் கர்நாடகா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95ஆவது கூட்டத்தில், பிப்.1 முதல் தமிழகத்திற்கு 7.3 டி.எம்.சிக்குப் பதிலாக 2.3 டி.எம்.சி நீர் மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் உத்தரவுப்படி, கர்நாடகம் நீர் திறக்கவில்லை என்று தமிழகம் புகார் தெரிவித்தது.

பீர் உற்பத்தியை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்துவதால் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மதுக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நடப்பது அரசாங்கமா? அல்லது மது வணிக நிறுவனமா எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுக்காக அதிகமுறை ஐசிசி தொடர்களில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 14 தொடர்களில் விளையாடியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மா 13, கோலி 12, சச்சின், ஹர்பஜன் தலா 11 தொடர்களில் விளையாடியுள்ளனர். நடைபெறும் டி20 WC தொடர் ரோஹித்துக்கு 14ஆவது தொடராகும்.
Sorry, no posts matched your criteria.