News April 30, 2024
விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்தவர் மாயம்

நடிகர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்த மூதாட்டி மாயமானதாக அவரது உறவினர் X தளத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது சென்னை வாக்குச் சாவடியில் வாக்களித்த விஜய் சேதுபதியுடன், மூதாட்டி டாக்டர் கெளசல்யா எடுத்த செல்ஃபி வைரலானது. இந்நிலையில், அவரையும், அவரது மகனையும் ஏப்.22 முதல் காணவில்லை எனவும், போலீசார் அவர்களைத் தேடி வருவதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார்.
Similar News
News December 10, 2025
அதிமுக உடன் கூட்டணி இல்லையா?

ADMK பொதுக்குழுவில் துரோகிகளால் ஆட்சியை இழந்ததாக OPS உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு சி.வி.சண்முகம் பேசியதை கைதட்டி EPS வரவேற்றார். இதன் மூலம் இருவரையும் கூட்டணியில் இணைக்க அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதேநேரம் இருவரையும் கூட்டணியில் மீண்டும் இணைக்க, டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டுள்ளார். இதனால், இருவரும் கூட்டணியில் இணைவார்களா, இணையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 10, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி!

SIR படிவத்தை சமர்பிக்க நாளை, டிசம்பர் 11-ம் தேதியே கடைசி நாள். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <
News December 10, 2025
TN-ல் அடுத்த 100 நாள்களில் தேர்தல்: CV சண்முகம்

அதிமுகவை அழிக்க சில அரசியல் புரோக்கர்கள் முயற்சி செய்வதாக EX அமைச்சர் CV சண்முகம் விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 100 நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், நேரடி எதிரிகள், மறைமுக துரோகிகளுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என சூளுரைத்தார்.


