India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் ₹7 சொத்து மதிப்புடன் ஒருவர் களத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆந்திராவின் பபாடியா தனித் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வெறும் ₹7 மட்டுமே சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்தபடியாக, மகாராஷ்டிராவின் பீம்சேனா வேட்பாளர் சந்தோஷ் உபாலே, ₹83 சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ தோல்வியை தழுவியதால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு எளிதாகியிருக்கிறது. மே 18ஆம் தேதி நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் நிச்சயமாக ப்ளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. தோற்றாலும், ரன்-ரேட் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. வெல்லுமா CSK?

AI உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பங்குச் சந்தையின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். BSE சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றார். F&O trading செய்யும் 10இல் 9 பேர் பணத்தை இழப்பதாக செபி வெளியிட்டுள்ள தரவுகளைக் குறிப்பிட்ட அவர், மக்களின் சேமிப்பு கரைவதை எண்ணி கவலை தெரிவித்தார்.

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 16ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. ▶3 ஒருநாள் போட்டிகள் (ஜூன் 16, 19, 23) – பெங்களூரு, ▶1 டெஸ்ட் போட்டி (ஜூன் 28 – ஜூலை 1) – சென்னை, ▶3 டி20 போட்டிகள் (ஜூலை 5, 7, 9) – சென்னை. சமீபத்தில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹35ம், சவரனுக்கு ₹280ம் குறைந்தது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹91,000க்கும் விற்பனையாகிறது.

RCB-க்கு எதிரான போட்டியில் தான் விளையாடி இருந்தால், ப்ளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், நிறைய நம்பிக்கையுடன் இந்த சீசனில் களமிறங்கினோம் என்றும், வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நினைத்ததை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ரசிகர்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 50ஆவது படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், தனுஷ் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களையும் அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் பாஜக, 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஜம்மு – காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், உதம்பூர், லடாக் பகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கும் பாஜக, காஷ்மீரின் 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. இஸ்லாமியர்களின் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.