News May 15, 2024
இந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை

400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் பாஜக, 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஜம்மு – காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், உதம்பூர், லடாக் பகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கும் பாஜக, காஷ்மீரின் 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. இஸ்லாமியர்களின் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News December 8, 2025
மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!
News December 8, 2025
பிரபல நடிகர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய மகள்

டிச.8.. இந்நாளில் பாலிவுட் ஹீ-மேன் தர்மேந்திராவின் மும்பை வீடு ஆரவாரத்தால் நிரம்பி இருக்கும். ஆனால், அண்மையில் அவர் மறைந்ததால் மொத்த காட்சியும் மாறிவிட்டது. தர்மேந்திராவின் பிறந்த நாளான இன்று, அவரது இல்லமும், குடும்பத்தினரின் உள்ளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ‘மிகுந்த வலியுடன் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா. உங்களை பத்திரமாக இதயத்தில் வைத்திருப்பேன்’ என மகள் ஈஷா உருக்கமுடன் SM-ல் பதிவிட்டுள்ளார்.
News December 8, 2025
கொரோனாவுக்கு பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளர்ச்சி

கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய நாள தளர்ச்சி(Vascular Dysfunction) ஏற்படுவது TN அரசு டாக்டர்கள் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இது, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தை காட்டிலும் ஒன்றரை மடங்கு வீங்கும் பாதிப்பாகும். 2020 – 2023 வரை 11,420 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரியவந்துள்ளன. இதுவே இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


