India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் எப்போதும் எதிராகவே நின்றிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். எனினும், ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் கருதி அதனை நடத்த அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
மே 4-ம் தேதி நடக்கும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. <
லவ் மேரேஜ், அரேன்ஜ் மேரேஜ் எல்லாம் பழசு, இப்போ ‘Friendship Marriage’ தான் புதுசு என்பதைப் போல் சீனாவில் புதிய பழக்கம் டிரெண்டாகியுள்ளது. இந்த வகை மேரேஜை செய்யும் ஜோடிகள் திருமணம் மட்டுமே செய்யுமாம். படுக்கையையோ, படுக்கை அறையையோ பகிர மாட்டார்களாம். கல்யாணம் எப்போ என கேட்கும் உறவினர்களிடம் இருந்து தப்பிக்க காதல் இல்லாத இந்த வகை கல்யாணத்தை பலரும் விரும்புகின்றனராம். உங்கள் கருத்து என்ன?
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. பாக்., மீது முழுப் போர் தொடுத்தால், காஷ்மீர் உலகம் முழுதும் பேசுபொருளாகும். ஆனால், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க இந்தியா விரும்பாது. மேலும், இன்றைய சூழலில் முழு போர், இரு நாடுகளையும் பாதிக்கும். இரண்டுமே அணுஆயுத நாடுகளாக இருப்பதால், போர், ஒட்டுமொத்த உலகத்துக்குமே ஆபத்தாகும்.
இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்.,கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராஜஸ்தான் எல்லையில் விமானப்படை அதிரடி சோதனைகளை செய்து வருகிறது. ஏற்கெனவே பாக். அமைச்சர் அத்தாவுல்லா தரார், அடுத்த 24 – 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

அட்சய திருதியை என்பது இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு ஆகும். இந்த நாளில் சொத்து வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பிக்கை உண்டு. ஆனால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும், 10% தங்கம் மட்டுமே physical முறையில் வர்த்தகம் ஆகிறது. மீதம் அனைத்தும் பேப்பர் முறையில்தான். ஆகையால், அட்சய திருதியை தங்க விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
Sorry, no posts matched your criteria.